அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை நடக்கிறது

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை-அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை, நாளைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி, பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனுக்களை, நீதிபதி கிருஷ்ணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை, நாளைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.latest tamil news


கடந்த மாதம் 11ம் தேதி, பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனுக்களை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்கவும், இரண்டு வாரங்களில் விசாரணையை முடிக்கவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன.இரண்டு முறை இதே வழக்கை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்திருப்பதால், புதிதாக ஒரு நீதிபதி விசாரிக்கக் கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் முறையிடப்பட்டது.


latest tamil news


அதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளை விசாரிக்க, நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.புதிய நீதிபதி முன் இவ்வழக்குகள், நேற்று விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், வழக்கை தள்ளி வைக்கும்படி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கு விசாரணையை, வரும் 10க்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
09-ஆக-202213:25:36 IST Report Abuse
Soumya ஓபீஎஸ் விடியலின் கைக்கூலி
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
09-ஆக-202212:49:37 IST Report Abuse
Narayanan All members must be raided by immediately . All are made crorpathy by Pazhanisamy .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202210:48:26 IST Report Abuse
duruvasar இந்த நீதியரசர் சிறு வயதில் பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் தாமதமாக சென்ருகிராரம். பன்னீர்செல்வம் தரப்புக்கு இந்த விசயம் தெரியாமல் இருக்கவேண்டும். தெரிந்தால் இவரை மாற்ற சொல்லிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X