டி.என்.பி.எஸ்.சி., வழியாக ஏ.பி.ஆர்.ஓ., நியமனம்

Added : ஆக 09, 2022 | |
Advertisement
சென்னை : உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட நியமனங்கள், அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கான விளம்பர பணிகளை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியிடங்களை நிரப்புவதற்கு, அவ்வப்போது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.அதன்படி, நேரடி, பணிமாறுதல், பதவி
டி.என்.பி.எஸ்.சி., வழியாக ஏ.பி.ஆர்.ஓ., நியமனம்



சென்னை : உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட நியமனங்கள், அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கான விளம்பர பணிகளை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணியிடங்களை நிரப்புவதற்கு, அவ்வப்போது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.அதன்படி, நேரடி, பணிமாறுதல், பதவி உயர்வு வாயிலாக, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் நடந்தது. இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நேரடி நியமனத்திற்கான அடிப்படை தகுதிகளை நிர்ணயம் செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அறிக்கையின் படியும், அரசு பணியாளர் தேர்வாணைய கருத்து அடிப்படையிலும் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள், இனி அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகவே நிரப்பபடும். இப்பணியில் சேர்வதற்கு, ஊடகம் மற்றும் விளம்பரம் சார்ந்த பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X