இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': நகைக் கடை பூட்டை உடைத்து 280 சவரன் கொள்ளை

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்அமைச்சருக்கு ஓராண்டு சிறைகான்பூர்-சட்டவிரோதமாக ஆயுதங்களை பிரயோகித்த வழக்கில், உத்தர பிரதேச அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சன். இவர் மீதான


இந்திய நிகழ்வுகள்
அமைச்சருக்கு ஓராண்டு சிறைகான்பூர்-சட்டவிரோதமாக ஆயுதங்களை பிரயோகித்த வழக்கில், உத்தர பிரதேச அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


latest tamil newsஉ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சன். இவர் மீதான சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில், 30 ஆண்டுகளாக விசாரணை நடந்தது.இதில், இவருக்கு 6ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விபரத்தை அறிந்தவுடன், நீதிமன்றத்தில் இருந்து ராகேஷ் தலைமறைவாகி விட்டார். பின், தன் வழக்கறிஞர்களுடன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இது குறித்து விசாரித்த நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ததோடு, 1,500 ரூபாய் அபராதமும் விதித்தது. இருப்பினும், ராகேஷ் உடனடியாக ஜாமின் பெற்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


சிவசேனா எம்.பி.,க்கு14 நாள் காவல்latest tamil news


மும்பை,-சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையில் குடிசைகள் சீரமைப்பு திட்டத்தில்சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்தை அமலாக்கத் துறை ஆக. 1ல் கைது செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து, அவரை அமலாக்கத் துறை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தியது. நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.


கிணற்றில் மூதாட்டியின் உடல்: வாலிபர்களிடம் விசாரணைதிருவனந்தபுரம்,-கேரளாவில், 60 வயது மூதாட்டியின் உடல் கிணற்றில் மிதந்தது தொடர்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்து பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ஒருவரை தேடுகின்றனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆறு பேர், கேரளாவின் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தனர். இவர்கள் இருந்த வீட்டின் அருகே முதிய தம்பதி வசித்தனர். அந்த வீட்டில் இருந்த முதியவர் நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அவரது மனைவி இல்லை; பல இடங்களில் தேடினார். இறுதியில், வீட்டின் அருகேஉள்ள கிணற்றில் அவரது மனைவியின் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அக்கம் பக்கத்தில் விசாரித்த போலீசார், முதியவரின் வீட்டருகே வசிக்கும் கட்டட தொழிலாளர்களில் ஐந்து பேரை விசாரித்து வருகின்றனர். அதில் மற்றொருவரை காணவில்லை. அந்த நபர் முதியவர் வீட்டில் வேலை செய்தது தெரிய வந்துள்ளது. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பணம், நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


பயங்கரவாத அமைப்பினர் வீடுகளில் சோதனை


ஜம்மு-தடை செய்யப்பட்டு உள்ள ஜே.இ.எல்., எனப்படும் ஜமாயத் - இ - இஸ்லாமி அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தியது.ஜம்மு - காஷ்மீரில் இயங்கி வரும் ஜே.இ.எல்., அமைப்பை, மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு தடை செய்து, 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த அமைப்புக்கு தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவது தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜே.இ.எல்., பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடந்தது.குறிப்பாக ஜம்மு மற்றும் தோடா மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


தமிழக நிகழ்வுகள்
அரசு பணி வாங்கித் தருவதாக போலி ஆணைகள் வழங்கி ரூ.30 லட்சம் மோசடி
தேனி-மாநகராட்சி, நகராட்சி, தபால் நிலையத்தில் அரசு பணி வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த தேனி பழனிசெட்டிபட்டி லட்சுமிநகரை சேர்ந்த மருந்து விற்பனையாளர் செண்பகபாண்டியனை 35, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பழனிச்செட்டிபட்டியை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் லோகேந்திரனிடம் 30 அதே பகுதியில் மருந்து விற்பனையாளர் செண்பகபாண்டியன் 35 மாநகராட்சி, தபால் நிலையம், நகராட்சி உட்பட அரசுத்துறைகளில் பணி வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய லோகேந்திரன் தனது 2 சகோதரிகள், சித்தி என 3 பேருக்கு பணி வழங்க வலியுறுத்தி ரூ.18 லட்சத்தை செண்பகபாண்டியனிடம் வழங்கி உள்ளார்.வேலை வாங்கி தராததால் 2021ல் ரூ.12 லட்சத்தை மீண்டும் செண்பக பாண்டியன் திருப்பி வழங்கினார். மீதி ரூ.6 லட்சத்தை தரவில்லை. சகோதரிகளுக்கும், சித்திக்கும் அரசு பணி ஆணைகளை வழங்கினார்.

வேலைக்கு சேர சென்றபோது அது போலி என தெரிந்தது. இதுகுறித்து லோகேந்திரன் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.செண்பகபாண்டியன், அவரின் நண்பர் கவுதமன், மற்றும் ஒரு பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.சென்னையை சேர்ந்த ஒருவர், துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இருவர் என மூவரிடம் செண்பகபாண்டியன் ரூ.24 லட்சம் பெற்று மொத்தம் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. செண்பகபாண்டியனை போலீசார் நேற்று கைது செய்தனர். கவுதமன், மற்றும் ஒரு பெண்னை தேடி வருகின்றனர்.


12,000 கிலோ அரிசி பறிமுதல்


செஞ்சி-விழுப்புரம் மாவட்டம், கஞ்சனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்ணாந்தல் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தனர்.

அதில், 50 கிலோ மூட்டைகளில், 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது. டிரைவரிடம் விசாரணை நடத்தினர். வேலுாரைச் சேர்ந்த குமரேசன், 27, என, தெரிந்தது.கஞ்சனுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ரேஷன் அரிசியை வாங்கி, கண்ணாந்தல் கிராமத்தைச் சேர்ந்த சகாயம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஏற்றி வருவதாக தெரிவித்தார்.விழுப்புரம் குடிமைப் பொருள் கடத்தல் பிரிவு போலீசில் லாரி ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், வழக்குப் பதிந்து அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து, குமரேசனையும் கைது செய்தனர்.


நகைக்கடையில் 280 சவரன் நகை கொள்ளை
latest tamil newsகள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடை பூட்டை உடைத்து, 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான, 280 சவரன் நகை, 30 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் லோகநாதன், 40. இவர், ஜூனில், கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுார் கிராமத்தில், புதிய நகைக்கடை திறந்தார்.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கடையில் பணிபுரியும் ரூபேஷ்குமார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, 'லாக்கரில்' வைத்து, கடையை பூட்டி சென்றார்.நேற்று காலை, 6:30 மணிக்கு கடையின் வெளிப்பக்க பூட்டு உடைந்திருப்பதாக, கடை உரிமையாளர் லோகநாதனுக்கும், வரஞ்சரம் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கடையின் வெளிப்பக்கத்தில் இருந்த இரண்டு பூட்டுகள் அறுக்கப்பட்டிருந்தன.கடையை ஒட்டியவாறு உள்ள வங்கியின், 'கேமரா ஒயர்' துண்டிக்கப்பட்டிருந்தது. கடைக்கு பின்புறமும், மணிகண்டன் என்பவரது விளைநிலத்தில் மோதிரம் உள்ளிட்ட சில நகைகளும், ட்ரேக்களும் கிடந்தன.

இதை பார்த்தவர்கள், அங்கிருந்த நகைகளை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு கிடந்த மது பாட்டில்கள், கடையின் வெளிப்பக்க பூட்டு, 'ஷட்டர்' மற்றும் கடையில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.லாக்கர் பூட்டை உடைத்து அதில் இருந்த, 280 சவரன் நகை, 30 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் என, 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிந்தது.போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக கேமரா காட்சிகள் பதிவாகும் 'ஹார்ட் டிஸ்க்'கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.மோப்ப நாய் கடையில் இருந்து, 1 கி.மீ., துாரம் சென்று நின்றது. இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


போலி 'டிடெக்டிவ் ஏஜன்சி'இருவர் கைது


திருச்சி-திருச்சியில் போலி, 'டிடெக்டிவ்' ஏஜன்சி நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிய இருவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsதிருச்சி, முசிறியைச் சேர்ந்த ஒருவர், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில், துப்பறியும் நிறுவனத்தை திருச்சியில் போலியாக நடத்தி வரும் நபரால் ஏமாற்றப்பட்டதாக புகார் கொடுத்தார்.இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார், 31, வசந்த், 24, ஆகியோர் மக்களை ஏமாற்றியது தெரிந்தது.திருச்சி, சிந்தனைபுரம் மற்றும் எடமலைபட்டிப்புதுார் ஆகிய இடங்களில், 'திருச்சி டிடெக்டிவ் ஏஜன்சி' என்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி, பொது மக்களை ஏமாற்றியது தெரிந்தது.சைபர் கிரைம் போலீசார், நேற்று இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


திருந்தவே மாட்டாங்களா? 2 ஆசிரியைகள், ஒரு ஆசிரியர் மீது 'போக்சோ' வழக்குமதுரை-பத்தாம் வகுப்பு மாணவி புகாரில், அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியைகள் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 'சைல்டு லைன்' எனப்படும் குழந்தைகள் நல அமைப்பை, '1098' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, ஆசிரியர்கள் குறித்து புகார் தெரிவித்தார்.தொடர்ந்து, குழந்தைகள் நல குழும உறுப்பினர் சாந்தி, பள்ளிக்கு சென்று மாணவியிடம் விசாரித்தார். மாணவி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், அறிக்கை தயாரித்து புகாராக கருப்பாயூரணி போலீசில் அளித்தார்.முதற்கட்ட விசாரணையில், ஆசிரியர்களுக்கு இடையிலான, 'ஈகோ' பிரச்னையில், மாணவியை புகார் கொடுக்க செய்தது தெரிந்தது.

ஆனால், மாணவியின் வாக்குமூலம் அடிப்படையில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன் மற்றும் இரு ஆசிரியைகள் மீது, 'போக்சோ' வழக்குப்பதிவு செய்யப்பட்டது.போலீசார் கூறியதாவது:ஆசிரியர் அன்பழகன் மாணவியின் பின் பகுதியில், கை, குச்சியால் தட்டியுள்ளார். உடற்பயிற்சி வகுப்பின் போது, மாணவியரை ஊக்குவிப்பதற்காக இதுபோல செய்துள்ளார். இது, போக்சோ சட்டத்தின் கீழ், பாலியல் சீண்டலாக பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஆசிரியர் குறித்து பெற்றோரிடம் சொல்லப் போவதாக மாணவி கூறியபோது, அதை இரு ஆசிரியைகள் பொருட்படுத்தாமல் கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


நகை மதிப்பீட்டாளர்ரூ.22 லட்சம் மோசடிஓசூர்-ஓசூர் அருகே, போலி ஆவணம் வாயிலாக, 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் மீது, வங்கி மேலாளர் புகார் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், நவதி அருகே, இந்தியன் வங்கி கிளையில், போச்சம்பள்ளி, வடமலப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன், 38, தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார்.இவர், 2021 நவ., 3 முதல், கடந்த மே 11 வரையிலான காலகட்டத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகைக்கு நகையை அடமானம் வைத்தது போல, 22 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து, அவரிடம், வங்கி மேலாளர் வெங்கடேசன், 30, விசாரித்தார். இதில், 3.79 லட்சம் ரூபாயை செலுத்திய வெங்கடேசன், 18 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்த மறுத்து விட்டார்.வங்கி மேலாளர் வெங்கடேசன் புகார்படி, நகை மதிப்பீட்டாளர் வெங்கடேசன் மீது, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202207:26:30 IST Report Abuse
RAJAN முகத்துல சுரத்தே இல்லாம கைய தூக்கி காண்பிக்கிறார் ராவடி ராவத். முன் பகல் செய்யின் பின் பகல் விளையும்.
Rate this:
Cancel
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202207:22:45 IST Report Abuse
Rajan பூட்டுல எப்படி 250 சவரன் நகை வச்சாங்க.
Rate this:
Cancel
09-ஆக-202206:17:53 IST Report Abuse
அப்புசாமி ... 30 வருஷமா ஒரு கேசை விசாரிச்சு 1500 ரூவா அபராதமும் ஓராண்டு சிறையுமாடா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X