இது உங்கள் இடம்: தாமாக முன்வந்து விசாரிக்குமா கோர்ட்?

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (81) | |
Advertisement
உலகம், நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ஆர்.விக்னேஷ், உடுமலையில் இருந்து எழுதுகிறார்: கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், குறிப்பிட்ட மதத்தை, அவர்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துவதை, நம் அரசியல் சட்டம் அனுமதிப்பதில்லை. ஆனால், ஈ.வெ.ரா.,வின் அடிவருடிகளோ, 'கடவுள் மறுப்பு' என்று கூறி, ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை மட்டுமே,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலகம், நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ஆர்.விக்னேஷ், உடுமலையில் இருந்து எழுதுகிறார்:

கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், குறிப்பிட்ட மதத்தை, அவர்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துவதை, நம் அரசியல் சட்டம் அனுமதிப்பதில்லை. ஆனால், ஈ.வெ.ரா.,வின் அடிவருடிகளோ, 'கடவுள் மறுப்பு' என்று கூறி, ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை மட்டுமே, இழிவுபடுத்துவதை கொள்கையாக கடைப்பிடிக்கின்றனர்.latest tamil newsகோவில் வாசலிலேயே, ஈ.வெ.ரா., சிலையை நிறுவி, 'கடவுள் இல்லவே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என, எழுதி வைத்திருக்கின்றனர். வேறு எந்த மதத்தினரின் வழிபாட்டு தலங்களின் முன்னும், இப்படியானதொரு இழிசெயலை இவர்கள் செய்வதில்லை; செய்யவும் முடியாது.ஹிந்து கடவுளை மறுப்பது மட்டுமே, இந்த கொள்கை குன்றுகளின் வேலை. 'கடவுள், ஹிந்து மதத்தில் மட்டும் தான் இருக்கிறார்...' என, இவர்கள் நம்புகின்றனரோ என்னவோ; இல்லையென்றால், பிற மத வழிபாட்டு தலங்களின் வாசலிலும், இவர்கள் ஏன் கடவுள் மறுப்பு வாசகங்களை வைப்பதில்லை?

'கடவுளை கற்பித்தவன் முட்டாள்...' என்று ஹிந்து கோவில் வாசலில் மட்டும், ஈ.வெ.ரா.,வின் சிலையை வைத்து, அதில் எழுதி வைத்திருப்பதைப் போல, 'அரசை நம்புபவன் முட்டாள்' என சட்டசபை வாசலிலும், 'காவல் துறையை நம்புபவன் முட்டாள்' என காவல் நிலைய வாசலிலும்,'நீதித்துறையை நம்புபவன் முட்டாள்' என, நீதிமன்ற வாசலிலும் வைக்க முடியுமா... அப்படி வைத்தால் வழக்கும், சட்டமும் பாய்ந்து விடாதா?மனிதர்களால் உருவாக்கப்பட்ட துறைகளுக்கே மரியாதை தரவேண்டும்; அவற்றின் மாண்பு காக்கப்படவேண்டும் என்றிருக்கையில், ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்தும் துணிச்சலை மட்டும், இவர்களுக்கு யார் தந்தது... எந்த சட்டம் தந்தது?


latest tamil newsஹிந்துக்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துவதை, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து, கோவில்கள் முன், கோவில்கள் அருகில் இருக்கும் ஈ.வெ.ரா., சிலைகளை அகற்ற உத்தரவிடலாம் அல்லது இறை நிந்தனை வாசகங்களை நீக்கி, வேறு வாசகங்களை வைக்கலாம் என்றாவது உத்தரவிட வேண்டும்; இதைத்தான், கோடான கோடி ஹிந்துக்களும் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-ஆக-202202:06:43 IST Report Abuse
BASKAR TETCHANA இதை எப்படி வேண்டுமானாலும் எழுதி எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். என் என்றால் அதற்க்கு தகுதியானவர்கள் தான். மக்கள் மனசாட்சிப்படி நடங்கள். உங்கள் மனசாட்சிப்படி வோட்டு போட்டு ஒரு நல்ல அரசை உண்டாக்குங்கள். அப்போது இந்த விழா கிருமிகள் தானாக ஓடிவிடும்.
Rate this:
Cancel
sugumar s - CHENNAI,இந்தியா
09-ஆக-202220:33:41 IST Report Abuse
sugumar s DK and their partner parties will always criticise hindus and hinduism. As wished by the user I also support Court should come and address such issues on their own
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
09-ஆக-202217:21:40 IST Report Abuse
DVRR சுதந்திரம் ஒரு தெரு நாய்க்கு எவ்வளவு உண்டோ அதே அளவில் தான் இந்த சொறியான் கட்சி உபயோக்கின்றது அதை மீறி உபயோகிப்பதில்லை அப்படி நாம் நினைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X