இலங்கை நீதிமன்ற உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ராமேஸ்வரம் : இலங்கை வசமிருந்த ராமேஸ்வரம் விசைப்படகை, அரசுடைமையாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மார்ச், 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து எடிசன் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆறு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.மே மாதம் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்
இலங்கை நீதிமன்ற உத்தரவால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி


ராமேஸ்வரம் : இலங்கை வசமிருந்த ராமேஸ்வரம் விசைப்படகை, அரசுடைமையாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மார்ச், 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து எடிசன் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆறு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.

மே மாதம் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர் ஆகஸ்ட், 5ல் நேரில் ஆஜராக, கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், படகு உரிமையாளர் ஆஜராகவில்லை. நேற்று அப்படகை அரசுடைமையாக்கி, நீதிபதி பி.ஆர்.ஸ்மத் ஜெமீல் உத்தரவிட்டார்.ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலர் சகாயம் கூறுகையில், ''ஆக., 5ல் படகு உரிமையாளர் ஆஜராகுவதில் விலக்கு பெற, அந்நாட்டு வக்கீலிடம் வலியுறுத்தினோம்.

ஆனால், அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.''இதனால், இன்று படகை இழந்து உரிமையாளர் தவிக்கிறார். இப்படகை மீட்க இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202219:45:22 IST Report Abuse
N Sasikumar Yadhav ராமேஸ்வரம் மீனவர்கள் நன்றி விசுவாசம் உள்ளவர்கள் . பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையென்றாலும் மோடிஜி மீனவர்களை கைவிடமாட்டார் . அப்படியே படகை மீட்டு கொடுத்துவிட்டாலும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அந்தளவிற்கு நன்றி விசுவாசமானவர்கள் ராமேஸ்வர மீனவர்கள்
Rate this:
Cancel
09-ஆக-202217:52:08 IST Report Abuse
Saminathan S இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கும் நிதி உதவியை நிறுத்த வேண்டும். ஒரு பக்கம் நம்ப நாட்டின் நிதி உதவியை பெற்று கொண்டு இன்னொரு பக்கம் நம்ப மீனவர்கள் படகுகளை பரித்து கொள்கிறது
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
09-ஆக-202208:37:05 IST Report Abuse
shyamnats இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் வித்திட்டது கட்டுமரம் தலைமையிலான தி மு க- கச்ச தீவு தாரை வார்ப்பு. இரண்டாம் மூன்றாம் தலைமுறை மட்டும் தீர்த்து விடுவார்கள் என்று எதிர் பார்ப்பது மடைமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X