வேலைவாய்ப்பு பதிவு முறைகேடுகள் தடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு| Dinamalar

வேலைவாய்ப்பு பதிவு முறைகேடுகள் தடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (6) | |
மதுரை : 'வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளில் முறைகேடுகளை தடுக்க, வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த
வேலைவாய்ப்பு பதிவு,  முறைகேடு, உயர்நீதிமன்றம்,  மதுரை கிளை, உத்தரவு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneமதுரை : 'வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளில் முறைகேடுகளை தடுக்க, வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பத்தாம் வகுப்பு முடித்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற தகுதியை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2010ல் பதிவு செய்தேன்; எனக்கு பதிவு எண் வழங்கப்பட்டது.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பை, 2011ல் பதிவு செய்தேன். பதிவை குடும்ப சூழ்நிலையால், 2013ல் புதுப்பிக்கத் தவறிவிட்டேன்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பிக்க, 2021ல் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கியது.


latest tamil newsஎன் பதிவை புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் நுழைந்தேன். என் பதிவு எண்ணைப் பயன்படுத்தி, வேறு ஒருவருக்கு வேலை வழங்கப்பட்டிருந்தது.அவரின் பணி நியமனத்தை ரத்து செய்து, எனக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி, 2021 செப்டம்பரில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் மனு அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:அப்போதைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரனால், சட்ட விரோதமாக பணி வழங்கப்பட்டது. பணி பெற்றவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொண்டீஸ்வரன் கட்டாய ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டிருந்ததாலும், அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய, துறை ரீதியான நடவடிக்கைகளை துவங்க, தமிழக அரசிடம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அனுமதி கோரியுள்ளார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:அரசிடமிருந்து அனுமதி பெற்று முடிந்தவரை விரைவாக, தொண்டீஸ்வரன் மீது துறைரீதியான நடவடிக்கைகளை துவங்கவும், குற்ற வழக்கு பதிவு செய்யப்படவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் உறுதி செய்ய வேண்டும்.செந்தில்குமாருக்கு பதிலாக வேலை பெற்ற நபருக்கு எதிராக, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வழக்கை முன்னுதாரணமாக கொண்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளில் முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.இது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது சாமானியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X