பல்கலை பாடத்திட்டத்தை மாற்ற துணை வேந்தர்கள் கருத்தரங்கம்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை- பல்கலைகளின் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 17ம் தேதி துணைவேந்தர்கள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:சிதம்பரம், அண்ணாமலை பல்கலை, 2013ல் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன், தனியார் பல்கலையாக இருந்தது. அப்போது, 1,573 பேராசிரியர்கள், 4,277 பணியாளர்கள், தேவைக்கு அதிகமாக உபரியாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை- பல்கலைகளின் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 17ம் தேதி துணைவேந்தர்கள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.



latest tamil news




உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:சிதம்பரம், அண்ணாமலை பல்கலை, 2013ல் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன், தனியார் பல்கலையாக இருந்தது. அப்போது, 1,573 பேராசிரியர்கள், 4,277 பணியாளர்கள், தேவைக்கு அதிகமாக உபரியாக நியமிக்கப்பட்டனர். இதுபோன்று எந்த நிறுவனத்திலும் நியமிக்க மாட்டார்கள். அப்படி ஒரு மோசமான நியமனம் நடந்துள்ளது. இதையடுத்தே, அந்த பல்கலை அரசுடைமை ஆக்கப்பட்டது.

அதன்பின், அண்ணாமலை பல்கலையில் நிர்வாக சிக்கல், நிதி பிரச்னை ஏற்பட்டது. அதனால், 1,204 ஆசிரியர்கள் மற்றும் 3,246 பணியாளர்கள், அரசின் வேறு துறைகளில் மாற்று பணிக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் உபரியாக உள்ளவர்களுக்கு, அரசின் புதிய கலை அறிவியல் கல்லுாரிகளில் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக அடிப்படையில், 417 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு ப


latest tamil news


ணி நீட்டிப்பு வழங்குவதா என, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும், அண்ணாமலை பல்கலை ஊழியர்களின் சம்பளத்துக்கு, அரசின் சார்பில், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பாடத் திட்டங்களை சீரமைப்பது தொடர்பாக, வரும், 17ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், துணை வேந்தர்களை அழைத்து, கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202209:53:42 IST Report Abuse
ஆரூர் ரங் எல்லோருக்கும் ஆளுக்கொரு யுனஸ்கோ சாக்ரட்டீஸ் பட்டம் வாங்கிக் 😉🙃கொடுக்க வழி பாருங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202209:27:01 IST Report Abuse
duruvasar கல்வி செம்மல் செனட் மெம்பெராக இருப்பதால் துணை வேந்தர்களுகு இதில் பணி சுமை அதிகமிருக்காது. மேலும் நடிகர் சூரியா, சத்யராஜ் போன்ற கல்வி பெருன்தகைகளின் ஆலோசனைகளும் எளிதாக கிடைக்கும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202207:13:40 IST Report Abuse
Kasimani Baskaran இதுதான் கடைசி சந்தர்ப்பம் திமுக பற்றிய பாடத்தை கல்லூரியிலும் கூட சொல்லிக்கொடுக்க வேண்டும்... - உபிஸ்
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
09-ஆக-202213:38:01 IST Report Abuse
மனிதன், எப்படி, நீங்க வரலாற்றை மாற்றி சொல்லி கொடுப்பது போலவா???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X