ஹிந்தி கற்கலாம்: சொல்கிறார் உதயநிதி

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (76) | |
Advertisement
சென்னை-அமீர் கான் தயாரித்து நடித்துள்ள, லால்சிங் சத்தா படம், தமிழ் உட்பட பல மொழிகளில், வரும் 11ல் வெளியாகிறது. இப்படத்தை, தமிழகத்தில் நடிகர் உதயநிதி வெளியிடுகிறார். படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், உதயநிதி பேசியதாவது:பள்ளிக்கு 'கட்' அடித்து விட்டு அமீர் கான், ஊர்மிளா நடித்த ரங்கீலா படத்தை பார்த்துள்ளேன். நான் அமீர் கானின் பெரிய ரசிகன். அவர் நடித்த படத்தை, நான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-அமீர் கான் தயாரித்து நடித்துள்ள, லால்சிங் சத்தா படம், தமிழ் உட்பட பல மொழிகளில், வரும் 11ல் வெளியாகிறது. இப்படத்தை, தமிழகத்தில் நடிகர் உதயநிதி வெளியிடுகிறார்.latest tamil newsபடத்தின் விளம்பர நிகழ்ச்சியில், உதயநிதி பேசியதாவது:பள்ளிக்கு 'கட்' அடித்து விட்டு அமீர் கான், ஊர்மிளா நடித்த ரங்கீலா படத்தை பார்த்துள்ளேன். நான் அமீர் கானின் பெரிய ரசிகன். அவர் நடித்த படத்தை, நான் வெளியிடுவதை என்னால் நம்ப முடியவில்லை.'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் சார்பில் நிறைய படத்தை வெளியிடுகிறோம். ஹிந்தி படத்தையாவது விட்டு வைப்போம் என நினைத்தேன். அமீர் கானே நேரடியாக பேசினார்.

படம் பார்க்காமலேயே, படத்தை வெளியிட ஒப்புக் கொண்டேன். பின், படத்தை பார்த்தபோது உலகத்தரத்தில் படம் உள்ளது.ஹிந்தி திணிப்புக்கு தான், 'ஹிந்தி தெரியாது போடா' என்றோம். ஒரு மொழியை கற்க கூடாது என நாங்கள் சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்கலாம். ஆனால், ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. இது தான் தி.மு.க.,வின் கொள்கை.இவ்வாறு உதயநிதி பேசினார்.


latest tamil news'வியாபாரமே பெரிது!'

'தமிழகத்தில் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தார் தாத்தா கருணாநிதி; அவரது பேரன் உதயநிதி, அமீர் கான் நடித்த ஹிந்தி திரைப்படத்தை வாங்கி, தமிழகத்தில் வெளியிடுகிறார்' என, கிண்டல் செய்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.அவரது 'டுவிட்டர்' பதிவு:'ஹிந்தி எந்த வடிவத்திலும் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படாது' என, உதயநிதியின் தாத்தாவும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியிருந்தார். தற்போதைய எம்.எல்.ஏ., வான அவரது பேரன் உதயநிதி, நடிகர் அமீர் கானின் ஹிந்தி திரைப்படமான, லால் சிங் சத்தாவை வாங்கி, தமிழகத்தில் வினியோகம் செய்வதாக கூறியுள்ளார். இதில் தெரியும் விஷயம் என்னவெனில், அவர்களுக்கு அரசியலை விட வியாபாரமே முதன்மையானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugumar s - CHENNAI,இந்தியா
09-ஆக-202220:35:47 IST Report Abuse
sugumar s Dont Learn Hindi is only for people. All the DMK members and many party people know Hindi. Business is more important than KOLKAI
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
09-ஆக-202220:04:44 IST Report Abuse
Dharmavaan இவன் யார் அனுமதி கொடுக்க.என்ன கேவலமான நிலை தமிழனுக்கு.
Rate this:
Cancel
DOSS - புதுச்செரி,இந்தியா
09-ஆக-202219:04:36 IST Report Abuse
DOSS நல்ல முடிவு. நாவோதய பள்ளி ஆரம்பிக்கலாமே ஆயிரக் கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X