கம்பம் : நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் வீடுகள் தோறும் ஆக, 13 முதல் 15 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதை ஊராட்சி செயலர்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைத்து 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் அனைத்து வீடுகளிலும் ஆக. 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்கு கண்டிப்பாக தேசிய கொடி ஏற்ற வேண்டும். கொடி ஏற்றாத வீடுகளை கண்டறிந்து அந்த வீடுகளில் தேசிய கொடி ஏற்ற ஊராட்சி செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பளிப்புகளாக கொடிகளை பெற்று, வீடுகளுக்கும் வழங்கவும் வேண்டும். ஊராட்சி அலுவலகங்கள் மூன்று நாட்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. ஊராட்சி செயலர்கள் கூறுகையில், "இப்போதிருத்தே வீடு வீடாக சென்று தேசிய கொடி ஏற்ற கூறுகிறோம். தேசியகொடி வாங்க முடியாதவர்களுக்கு கொடிகளும் தருகிறோம்" என்றார்.