எளிமையின் அடையாளம் நல்லகண்ணு; ரயில் பயணிகள் பெருமிதம்

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் நடந்த இ.கம்யூ., மாநாட்டில் பங்கேற்க வந்த மூத்த தலைவர் நல்லகண்ணுவின் எளிமை, அவருடன் பயணித்த பயணிகளை பிரமிக்க வைத்துள்ளது.திருப்பூரில் கடந்த, 6ம் தேதி துவங்கிய இ.கம்யூ.,வின், 25வது மாநில மாநாடு இன்று நிறைவடைகிறது. மாநாட்டில் பங்கேற்க வந்த கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, கடந்த, 5ம் தேதி இரவு சென்னையில் இருந்து திருப்பூருக்கு ரயிலில்
எளிமையின் அடையாளம் நல்லகண்ணு; ரயில் பயணிகள் பெருமிதம்

திருப்பூர் : திருப்பூரில் நடந்த இ.கம்யூ., மாநாட்டில் பங்கேற்க வந்த மூத்த தலைவர் நல்லகண்ணுவின் எளிமை, அவருடன் பயணித்த பயணிகளை பிரமிக்க வைத்துள்ளது.

திருப்பூரில் கடந்த, 6ம் தேதி துவங்கிய இ.கம்யூ.,வின், 25வது மாநில மாநாடு இன்று நிறைவடைகிறது. மாநாட்டில் பங்கேற்க வந்த கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, கடந்த, 5ம் தேதி இரவு சென்னையில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் வந்தார்.அவருடன் பயணித்த சிலர் கூறியதாவது:சென்னை சென்ட்ரலில் இருந்து, கடந்த, 5ம் தேதி இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 டயர் 'ஏசி' வகுப்பில் பயணித்தோம்.

உள்ளே சென்று பார்த்த போது நல்லகண்ணு அமர்ந்திருந்தார். ஏறத்தாழ, 70 ஆண்டு காலம் அரசியல் வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து கொண்ட அந்த மனிதரின் எளிமையை பார்த்து அசந்து போனோம்.அவருடன் உதவியாளர் ஒருவரும் வந்தார். ரயில் புறப்படும் போது, 'கொஞ்சம் வெந்நீர் வேண்டும்' என்றார். உடனே, நாங்கள் வெளியே சென்று வெந்நீர் மற்றும் இட்லியும் வாங்கி கொடுத்தோம். இரண்டு இட்லி சாப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பூர் வந்தோம். ஆனால், நல்லகண்ணுவை வரவேற்க யாருமே இல்லை. அதனை கண்டுகொள்ளாமல் அவரே தடுமாறி இறங்கி சென்றார். அதே ரயிலில் பயணித்த காங்., தலைவர் அழகிரி உள்ளிட்டோரை வரவேற்க பலரும் வந்திருந்தனர். ஆனால், அதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், அந்த மாபெரும் மனிதர், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறி ஓட்டலுக்கு சென்றார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வரும், 15ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள சுதந்திர தின விழாவில், தமிழக அரசின், 'தகைசால் தமிழர் விருதை' முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkateswaran TL - CHENNAI,இந்தியா
09-ஆக-202216:27:40 IST Report Abuse
venkateswaran TL எளிமை வரவேற்க தக்க ஒன்று ஆனால இந்தியாவில் தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியால் அவர்களது கொள்கையால் எந்த பயனும் கிடையாது. பாலகிருஷ்ணன் முத்தரசன் போன்றோர் நன்கு அனுபவிக்கிறார்கள் இந்த வயதிற்கு பிறகு எதற்கு இவர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
09-ஆக-202216:20:57 IST Report Abuse
Sri Ra நல்லவர் தான் அதனால்தான் கடைசி வரை இவரை தேசிய அரசியலுக்கு விடவில்லை சிகப்பு கட்சி ஆனாலும் இவர் மேல் ஜாதி இல்லையோ
Rate this:
Cancel
09-ஆக-202215:26:39 IST Report Abuse
N Sasikumar Yadhav ஆமாம் எளிமையின் சிகரம் நள்ளகன்னு அவருடைய பிள்ளைகள் பெரிய பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் அரசாங்கத்திடம் இலவசமாக வீடு கேட்குமளவு எளிமையானவர் நள்ளகன்னு இந்த எளிமை கம்யூனிஸ்டுகளின் உடன்பிறப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X