தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டு தொற்று!; காங்கயத்தில் பழனிசாமி தாக்கு| Dinamalar

தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டு 'தொற்று!'; காங்கயத்தில் பழனிசாமி தாக்கு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
திருப்பூர் : ''தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு என்ற தொற்று வந்து விடுகிறது,'' என்று, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.பழநி முருகன் கோவிலில் தரிசனம் செய்து, நேற்று காலை, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் காங்கயம் வழியாக, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி சேலம் சென்றார்.தாராபுரம், காங்கயத்தில், அ.தி.மு.க.,வினர் அளித்த வரவேற்பை ஏற்று
திமுக ஆட்சி, மின்வெட்டு, பழனிசாமி, DMK Govt, Palanisamy,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


திருப்பூர் : ''தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு என்ற தொற்று வந்து விடுகிறது,'' என்று, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.பழநி முருகன் கோவிலில் தரிசனம் செய்து, நேற்று காலை, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் காங்கயம் வழியாக, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி சேலம் சென்றார்.



தாராபுரம், காங்கயத்தில், அ.தி.மு.க.,வினர் அளித்த வரவேற்பை ஏற்று பழனிசாமி பேசியதாவது:ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்று ஸ்டாலின், மக்களை வாட்டி வதைக்கிறார். 'நீட்' தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு, 1,000 ரூபாய் தருவதாக சொன்னார்கள்; நிறைவேற்றவில்லை.நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். அ.தி.மு.க., ஏழைகளுக்காக துவங்கப்பட்ட கட்சி.நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். மக்களின் வறுமையும், கஷ்டமும் எனக்கு தெரியும்.



latest tamil news


ஸ்டாலின் போல் வசதி வாய்ப்போடு வளர்ந்தவன் அல்ல.கருணாநிதிக்கு பின் ஸ்டாலின், அதன் பின் உதயநிதி. ஆனால், அ.தி.மு.க.,வில் உழைக்கக்கூடிய யார் வேண்டுமானாலும், தலைமை பதவிக்கு வர முடியும். அதற்கு நானே சாட்சி.தி.மு.க.,வில் அப்படி யாரும் வர முடியாது. அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் வர முடியும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாத, திறமை இல்லாத முதல்வர் இன்று ஆண்டு கொண்டிருக்கிறார்.



எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும், அதற்கு ஒரு குழு போட்டு விடுவர். ஆட்சி பொறுப்பேற்று, 14 மாதத்தில், 37 குழுக்கள் போட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சி வந்தாலே மின்வெட்டு எனும் தொற்று வந்து விடும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X