ஒரு மாதத்தில் '5ஜி' சேவை: மத்திய அமைச்சர் உறுதி

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி-''மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், '5ஜி' தொழில்நுட்ப சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும்,'' என, மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுஹார் தெரிவித்தார். புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட அதிநவீன தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-''மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், '5ஜி' தொழில்நுட்ப சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும்,'' என, மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுஹார் தெரிவித்தார்.



latest tamil news


புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட அதிநவீன தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக, நம் நாட்டில் இன்று வலுவான 5ஜி மொபைல் தகவல் தொடர்பு சூழல் அமைப்பு உள்ளது.


latest tamil news


அதேபோல, 5ஜி தொழில்நுட்பத்தில் தங்கள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பல்வேறு நிறுவனங்களும் அறிந்து கொள்வதற்கான, 5ஜி பரிசோதனை உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 5ஜி சேவை இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202207:37:59 IST Report Abuse
அப்புசாமி அதுக்குள்ள பேரம் படிஞ்சிரும். 5ஜி சேவையைக் குடுக்க வேண்டிய உபகரணங்களும் , மென்பொருளும் இதுவரை நம்ன கிட்டே இல்லை. சீனா கிட்டேயிருந்து வாங்குனா சீப்பா கிடைக்கும். ஆனா, அவன்நம்ம தகவல்களை நமக்கு தெரியாமல் உருவிடுவான். ஐரோப்பா கிட்டே வாங்குனா விலை அதிகம். பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X