முதல்வர் ரங்கசாமி டில்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி, ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகு நேற்று இரவு திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு, முதல் முறையாக பிரதமரை நேரில் சந்தித்து, பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். புதுச்சேரியில் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி, ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகு நேற்று இரவு திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு, முதல் முறையாக பிரதமரை நேரில் சந்தித்து, பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.



latest tamil news




புதுச்சேரியில் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாமல், அரசின் அத்தியாவசிய தேவைகளுக்காக 5 மாதத்திற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் இம்மாதத்துடன் முடிவடைவதால், இந்தாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக நாளை 10ம் தேதி சட்டசபை கவர்னர் உரையுடன் துவங்க உள்ளதாகவும், மறுநாள் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என சபாநாயகர் அறிவித்தார்.


திட்டக்குழு கூட்டம்


அதனையொட்டி, கவர்னர் தமிழிசை தலைமையிலான திட்டக்குழு கூட்டத்தில், ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, ரூ.2,000 கோடி கூடுதல் நிதி கேட்டு மத்திய உள்துறைக்கு கோப்பு அனுப்பப் பட்டது. சட்டசபை நாளை கூடும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பட்ஜெட் தாக்கலுக்கு நேற்று வரை ஒப்புதல் கிடைக்கவில்லை.


latest tamil news




இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி, டில்லி சென்று பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், இன்று மதியம் 12:45 மணிக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்தது.அதனையொட்டி, முதல்வர் ரங்கசாமி நேற்று இரவு 9:00 மணிக்கு வீட்டில் இருந்து தனது தனிச் செயலருடன், காரில் சென்னைக்கு புறப்பட்டார். அங்கிருந்து இரவு 10:55 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் டில்லி சென்றார்.


பிரதமருடன் சந்திப்பு



அங்குள்ள புதுச்சேரி இல்லத்தில் தங்கியுள்ள முதல்வர் ரங்கசாமி, இன்று பகல் மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, பட்ஜெட் தாக்குதலுக்கான ஒப்புதல், மாநிலத்தின் கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, பேசுகிறார். அப்போது, புதுச்சேரி மாநிலத்தை நிதிக் குழுவில் சேர்க்கவும், ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை மற்றும் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202218:50:45 IST Report Abuse
venugopal s நிதிஷ்குமாருக்கு இருக்கும் ரோஷம் மானம் கூட இவருக்கு இல்லையே! இன்னும் எத்தனை காலம்தான் பாஜகவின் அடிமையாக அவர்கள் காலில் விழுந்து கிடப்பார் இவர்?
Rate this:
Cancel
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
09-ஆக-202213:45:27 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     பாவம் நிதிஸ் குமார் நிலை இல்லை ரஜினி நிலை இவருக்கு வரக்கூடாது ,
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
09-ஆக-202211:38:34 IST Report Abuse
J. G. Muthuraj ஒரு முதல்வர் டில்லி போகிறார் என்றால், பிரதமரிடம் நிதி வாங்கத்தானா? இதற்கு பெயர்தான் கூட்டாச்சியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X