ஒட்டன்சத்திரத்துக்கு பி.ஏ.பி., நீரா? எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பல்லடம் : ஒட்டன்சத்திரத்துக்கு ஆழியாற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் எடுத்து செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட(பி.ஏ.பி.,) அலுவலகம் முன் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்
ஒட்டன்சத்திரம், விவசாயிகள் , தமிழக அரசு ,  பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், Othanchatram, Parambikulam Azhiyar Project,


பல்லடம் : ஒட்டன்சத்திரத்துக்கு ஆழியாற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் எடுத்து செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட(பி.ஏ.பி.,) அலுவலகம் முன் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவர் வெற்றி பேசியதாவது:பி.ஏ.பி., திட்டத்தை மேம்படுத்துவதை விட்டு, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. திட்டம் மூலம், 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி விரிவுபடுத்தப்பட்டும், உரிய தண்ணீர் கிடைக்க ஆட்சியாளர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதை கண்டிக்கிறோம்.குடிநீர் வழங்க பல்வேறு வழிமுறைகள் இருக்க ஆழியாற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளது. 'விடியல் ஆட்சி' என்று சொன்னது இதுதானா. நமது சந்ததிக்கானது பி.ஏ.பி., பாசன திட்டம். அரசின் முடிவுக்காக ஒரு மாதம் காத்திருப்போம். திரும்பப் பெறவில்லை எனில், பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிடுவோம். திட்டம் ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடரும்.இவ்வாறு, அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
09-ஆக-202214:49:42 IST Report Abuse
jayvee மூடர்கள் .. சொந்த மாநிலத்திற்கு தண்ணி கொடுக்க தயங்கும் தமிழ் நண்டுகள்
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
09-ஆக-202212:03:08 IST Report Abuse
Rajamani K இப்போ எல்லாம் சொல்லுவீங்க. தேர்தல் வரும்போது 500, 600 வாங்கிட்டு குத்துடா தி மு க வுக்குன்னு போயிடுவீங்க
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
09-ஆக-202209:14:41 IST Report Abuse
GMM குடிநீர் வழங்க விவசாயிகள் போர்வையில் சமூக அக்கறை இல்லாமல் எதிர்த்து போராடுவது தவறு. குடிநீர் இன்றி உயிர் வாழ்வது கடினம். அரசுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும். விவசாய நிலங்கள் உண்மையான விவசாயம் தெரிந்த மக்களிடம் இருந்து கடன், தள்ளுபடி, வரி விலக்கு, மின்சாரம் பெற அரசியல் விவசாயிகளுக்கு மாறி விட்டது. அத்தியாவசிய தேவையை தடை செய்ய அனுமதிக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X