மின்கட்டணம் உயர்வு; பம்ப் செட் உற்பத்தியாளர்கள் அலறல்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கோவை: தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, பம்ப்செட் உற்பத்தித்தொழிலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, சீமா (தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம்) தெரிவித்துள்ளது.சீமா தலைவர் விக்னேஷ் அறிக்கை:நாட்டின் ஒட்டுமொத்த பம்ப் உற்பத்தியில், 55 சதவீதம் சீமா சங்க உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கோவைக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய பம்ப்செட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, பம்ப்செட் உற்பத்தித்தொழிலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, சீமா (தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம்) தெரிவித்துள்ளது.

சீமா தலைவர் விக்னேஷ் அறிக்கை:
நாட்டின் ஒட்டுமொத்த பம்ப் உற்பத்தியில், 55 சதவீதம் சீமா சங்க உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கோவைக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய பம்ப்செட் உற்பத்தி மையமாக திகழ்வது, குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட் நகரங்கள். அங்கு ஸ்டீல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், பம்ப்செட் உற்பத்திக்கு தேவையான ஸ்டீல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எளிதாகவும் குறைந்தவிலைக்கும் கிடைக்கிறது.latest tamil news
அதுமட்டுமல்லாமல் குஜராத்தில் உள்ள, கப்பல் உடைப்பு மையங்கள் மூலம் பவுண்டரிகளுக்கு தேவையான 'ஸ்கிராப்' குறைந்த விலையில் கிடைக்கிறது.இக்காரணங்களால், பம்ப்செட் தயாரிப்புக்கு தேவையான பாகங்கள் அங்கு, கோவையை விட பத்து சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆதலால் அவர்களின் பம்ப்செட்டுகளும், குறைந்த விலையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.


பம்ப்செட் உற்பத்திக்கு பாதிப்பு


நாட்டின் உற்பத்தியில், 80 சதவீதமாக இருந்த கோவையின் பங்களிப்பு, இது போன்ற காரணங்களால், 55 சதவீதமாக குறைந்து விட்டது. பம்ப்செட்டுகளுக்கான ஜி.எஸ்.டி.யு.ம்., 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பம்ப் தயாரிப்பாளர்களுக்கு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில், தமிழக மின்சார வாரியம் தற்போது அறிவித்துள்ள, 20 - 52 சதவீத மின் கட்டண உயர்வு, பம்ப் தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, பெருவாரியான பவுண்டரிகள், சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்தும் குறைந்த அழுத்தத்திற்கான அதிக பயனீட்டளவு கட்டணம், உயர்ந்த பயனீட்டு நேரத்துக்கான மின் பயன்பாட்டுக்கட்டண உயர்வு ஆகியவற்றால், பவுண்டரிகள், பம்ப் பாகங்கள் தயாரிப்பு செலவு அதிகரிக்கும்.

தொழில் வளர்ச்சிக்கு, அதிக முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு, மின் கட்டண உயர்வு குறித்து, மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து, தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, விக்னேஷ் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-202206:15:28 IST Report Abuse
Mani . V மக்கள் சாவதை பற்றி அரசுக்கு கவலையில்லை.
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
09-ஆக-202214:20:32 IST Report Abuse
vinu காஸ் விலை ஏற்றம். தமிழ்நாட்டில் எல்லா தாய் மார்களும் மத்திய அரசிற்கு ஏதிராக ஒப்பாரி.
Rate this:
Cancel
selvaraju - KUALA LUMPUR,மலேஷியா
09-ஆக-202212:45:10 IST Report Abuse
selvaraju Union BJP government taking away the rights of Tamil Nadu Free electricity, subsidy price electricity to farmers and weavers through Electricity Act Amendment Bill will be affected by Tamil Nadu Government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X