கடலில் கலக்கும் 1.73 லட்சம் கன அடி தண்ணீர்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
பெரம்பலுார் : 'வீணாக கடலில் கலக்கும், வினாடிக்கு, 1.73 லட்சம் கன அடி தண்ணீரை, அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலுார்-, தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், மீன்சுருட்டி அருகே, கீழணை உள்ளது. இந்த அணையின் உயரம், 9 அடி.75 ஆயிரம் ஏக்கர்அணையின் வாயிலாக, அரியலுார் மாவட்டத்தில்
கீழணை, அரியலுார் விவசாயிகள், கொள்ளிடம், Keelanai, Ariyalur farmers, Kollidham,


பெரம்பலுார் : 'வீணாக கடலில் கலக்கும், வினாடிக்கு, 1.73 லட்சம் கன அடி தண்ணீரை, அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலுார்-, தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், மீன்சுருட்டி அருகே, கீழணை உள்ளது. இந்த அணையின் உயரம், 9 அடி.


75 ஆயிரம் ஏக்கர்அணையின் வாயிலாக, அரியலுார் மாவட்டத்தில் தென்னவநல்லுார், வேப்பக்குடி, கொல்லாபுரம், பிள்ளையாபாளையம், வீரசோழபுரம் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விளை நிலங்களும், கடலுார் மாவட்டத்தில், காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் ஆகிய பகுதி விளை நிலங்களும் பாசனம் பெறுகின்றன.கல்லணையை தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர், இந்த கீழணையில் தேக்கப்படுகிறது.


latest tamil newsஅணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக செல்வதன் வாயிலாக, கடலுார் மாவட்டத்தில், 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.வடவாறு வழியாக பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் தேக்கப்பட்டு, அங்கிருந்து 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, சென்னைக்கும் குடிநீர் தேவைக்கு அனுப்பப்படுகிறது.தற்போது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

இதனால், கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு, 1 லட்சத்து, 74 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதில், வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது, பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படாததால், பொதுப்பணித்துறையினர், உபரிநீரை கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறந்து விட்டுள்ளனர்.இதனால், கீழணையில் இருந்து வினாடிக்கு, 1 லட்சத்து, 73 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் மேந்திரபள்ளி அருகே கடலில் வீணாக கலக்கும் நிலை உள்ளது.


நடவடிக்கைகீழணைக்கு, கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை, திருமானுார் அருகே, வாய்க்கால் அமைத்து, பொன்னேரிக்கு கொண்டு சென்று சேமித்தால், கூடுதலாக, 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.ஆனால், வாய்க்கால் அமைக்கப்படாத நிலையில், கீழணைக்கு வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறு வீணாகும் நீரை, அரியலுார் மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத்த, திருமானுார் அருகே வாய்க்கால் அமைத்து, பொன்னேரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரியலுார் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஆக-202220:09:30 IST Report Abuse
Bhaskaran அதில் ஏதேனும் ஆதாயம் இருந்தால் மட்டுமே விடியல் இறங்குவாங்கோ
Rate this:
Cancel
09-ஆக-202218:23:13 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K தண்ணீர் கடலில் தான் போய் சேர வேண்டும் என்பது விதி. சேமிக்கும் திட்டங்கள் எதுவும் தமிழ்நாடு மாநில ஆட்சியிடம் இருப்பதாக தெரியவில்லை. இப்படி வாளாவெட்டியாக இருந்தால் தானே, தண்ணீர் இல்லாத போது அண்டை மாநிலங்களுடன் உரசி அரசியல் செய்யலாம் இல்லையா !!!
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-ஆக-202218:17:13 IST Report Abuse
duruvasar ஆக பழனிசாமி பதவி விலகவேண்டும் . இதற்கு காரணமான அண்ணாமலை அரசியலை விட்டே விலகவேண்டும் . - ட்ராவிடின் ஸ்ட க்குகள் ஆர்பாட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X