தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.இன்று காலை வரையிலான நிலவரப்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
தமிழகம், மழை, வானிலை மையம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

இன்று காலை வரையிலான நிலவரப்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், கன மழை பெய்யும். இன்று பிற்பகல் முதல் 11ம் தேதி வரை, தமிழக வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தென் மாவட்டங்கள் ஆகியவற்றில், மிதமான மழை பெய்யும். சென்னையில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.


latest tamil news



அதிகபட்சம், 27 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, அவலாஞ்சி, மேல் பவானி, தேவாலா, பந்தலுாரில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.ஆந்திரா மற்றும் அதையொட்டிய மத்திய வங்க கடல் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X