'டாஸ்மாக்கை மூடுங்க'ன்னு நீங்க சொன்னா, இந்த மாநில அரசு கேட்குதா பாருங்க!

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:சீன உளவு கப்பலை, இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என, இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பா.ம.க., வலியுறுத்தி இருந்தது. அதன்படி, சீன கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 1987-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தப்
பேச்சு_பேட்டி_அறிக்கை, பாமக, அன்புமணி, ராமதாஸ்

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
சீன உளவு கப்பலை, இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என, இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பா.ம.க., வலியுறுத்தி இருந்தது. அதன்படி, சீன கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 1987-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தப் படக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசு கூட உங்க பேச்சை கேட்குது... ஆனா, 'டாஸ்மாக்கை மூடுங்க'ன்னு நீங்க சொன்னா, இந்த மாநில அரசு கேட்குதா பாருங்க!


ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்:
சமூக ஊடகங்களில் தங்களது முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்க பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், கருணாநிதி தேசியக் கொடியேற்றிய முகப்பு படத்தை, தமிழக முதல்வர் வைத்துள்ளார். இதில், எதற்கு அரசியல். இது, தவறான முன்னுதாரணம். தி.மு.க.,வோ, கருணாநிதி குடும்பமோ சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது போன்று சரித்திரத்தை திரிப்பதாகும். தேசியக் கொடியை முகப்பு படமாக முதல்வர் வைக்க வேண்டும்.

'கருணாநிதி குடும்பம் தான் சுதந்திரம் வாங்கி தந்தது' என ஒரு வாதத்துக்காக அவங்க சொன்னாலும், அதை நம்புற அளவுக்கு இங்க யாரும் ஏமாளிகள் இல்லை
latest tamil news


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, உலக வங்கி நிதியுதவியுடன் வாங்கப்படும் புதிய பஸ்களை, தனியார் நிறுவனத்தின் டிரைவர், கண்டக்டர்கள் இயக்குவர். அதற்கு மாதம் ஒரு தொகையை போக்குவரத்து கழகம் செலுத்தும். இந்த முறைப்படி, 2022ம் ஆண்டில் 500 பஸ்களையும், 2024-ம் ஆண்டுக்குள் மேலும் 500 பஸ்களையும் இயக்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது, போக்குவரத்து கழகங்களை, தனியார் மயமாக்கும் முயற்சியே தவிர வேறு இல்லை. சென்னை மாநகர போக்குவரத்து கட்டமைப்பை, அடித்தட்டு மக்களிடமிருந்து பறிக்கும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது.

'மத்திய அரசு தான் தனியார் மயமாக்குமா; எங்க பங்குக்கு நாங்களும் செய்வோம்ல' என வீம்பு பிடித்து, தமிழக அரசு களத்தில் இறங்கிடுச்சோ?


இந்திய கம்யூ., பொது செயலர்ராஜா பேட்டி:
பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கூட்டணியால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கூட்டாட்சி நெறிமுறை தகர்க்கப்படுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து, 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்தியாவில், தனித்தனியாக செயல்படும் கம்யூ., கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் தேவை.

முதல்ல நீங்க ஒன்றுபடுங்க... அப்புறமா, பா.ஜ.,வை ஆட்சியில இருந்து அகற்றும் திட்டத்தை பார்க்கலாம்!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202206:18:17 IST Report Abuse
அப்புசாமி இவரை சொல்றதை இவரோட அப்பாரே கேக்க மாட்டாரு. இவரை அப்பாரு சொல்றதை இவரை கேக்க மாட்டாரு.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
09-ஆக-202214:31:06 IST Report Abuse
sankar ஒயின் ஷாப்ப்பை மூடுங்கன்னு சொன்னா கர்நாடகாவில பிஜெபீ அரசு மூடுமா
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
09-ஆக-202213:12:59 IST Report Abuse
Narayanan Is there any rule that dmk only can paste the label? PMK too do the work. like that they are doing . Leave it. Tasmack can not be closed . All are earning money .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X