ஹாங்காங் அணியில் 3 தமிழர்கள்; ஒரே குடும்பத்தை சேர்ந்தோரால் பெருமை

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழகத்தை சேர்ந்த, கண்ணப்பன், அவரின் மனைவி சிகப்பி, அவர்களது மகன் தண்ணீர்மலை ஆகியோர், ஹாங்காங் அணியில் விளையாடுகின்றனர். இது குறித்து சிகப்பி கூறியதாவது: என் பூர்வீகம் மதுரை. 8 வயதில் செஸ் கற்று, 10 வயதில் விளையாடி பதக்கம் வென்றேன். அந்த செய்தி பத்திரிகையில் வந்த உத்வேகத்தில் கல்லூரி படிக்கும் வரை விளையாடி, பல பதக்கங்களை பெற்றேன். திருமணத்துக்குப் பின், கணவருடன்
ஹாங்காங் அணியில் 3 தமிழர்கள்; ஒரே குடும்பத்தை சேர்ந்தோரால் பெருமை

சென்னை: தமிழகத்தை சேர்ந்த, கண்ணப்பன், அவரின் மனைவி சிகப்பி, அவர்களது மகன் தண்ணீர்மலை ஆகியோர், ஹாங்காங் அணியில் விளையாடுகின்றனர்.

இது குறித்து சிகப்பி கூறியதாவது: என் பூர்வீகம் மதுரை. 8 வயதில் செஸ் கற்று, 10 வயதில் விளையாடி பதக்கம் வென்றேன். அந்த செய்தி பத்திரிகையில் வந்த உத்வேகத்தில் கல்லூரி படிக்கும் வரை விளையாடி, பல பதக்கங்களை பெற்றேன். திருமணத்துக்குப் பின், கணவருடன் ஹாங்காங் சென்றேன். அந்த நாட்டுக்காக விளையாட துவங்கினேன். மூன்று ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளோம். அதுவும், தமிழகத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக!

இது போன்ற பெரிய நிகழ்வு இதற்கு முன் இங்கு நடந்ததில்லை; தமிழகத்துக்குப் பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க நிகழ்வில், தமிழர்களை பற்றிய நிகழ்ச்சிகள் நடந்தபோது, ஹாங்காங் வீரர்களுக்கு, அவை குறித்து எடுத்துக் கூறினேன். இப்போதும், தமிழக வீரர்கள் நன்றாக விளையாடுகின்றனர். அவர்களின் விளையாட்டு வீடியோக்களை தவற விடுவதில்லை. வெளிநாட்டில் வாழ்ந்தாலும், வெளிநாட்டுக்காக விளையாடினாலும், தமிழர்கள் என்பதில் இருக்கும் பெருமையே தனி தான். இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீர்மலை கூறுகையில், ''எனக்கு தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோரின் விளையாட்டு முன்மாதிரியாக உள்ளது. ஹாங்காங் மிகச்சிறிய நாடு. என்றாலும், அங்கிருந்து தமிழகத்துக்கு விளையாட வந்திருப்பதில் மிகழ்ச்சி,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
11-ஆக-202202:29:40 IST Report Abuse
tamilvanan ஹாங் காங் சீனாவில் இருக்கும் நகரம். சீனா ஒலிம்பியாடில் கலந்து கொள்ளவில்லை. பிறகு எப்படி இவர்கள் ஒலிம்பியாடில் விளையாடினார்கள்? ஒன்றும் விளங்கவில்லை அய்யா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X