மரம் விழுந்ததில் கார் சேதம்

Added : ஆக 09, 2022 | |
Advertisement
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (ஆக.,9) நிலவரப்படி அப்பர்வானி, 220 மி. மீ., அவலாஞ்சி, 193 மி. மீ., மழை பதிவாகியுள்ளது. மஞ்சூர் - ஊட்டி பிரதான சாலையில் குந்தாபாலத்தில் ராட்சத மரம் ஒன்று காரின் மீது விழுந்தது. இதில் கார் முற்றிலும் சேதமானது. காரில் சிக்கியவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ
மரம் விழுந்ததில் கார் சேதம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (ஆக.,9) நிலவரப்படி அப்பர்வானி, 220 மி. மீ., அவலாஞ்சி, 193 மி. மீ., மழை பதிவாகியுள்ளது. மஞ்சூர் - ஊட்டி பிரதான சாலையில் குந்தாபாலத்தில் ராட்சத மரம் ஒன்று காரின் மீது விழுந்தது. இதில் கார் முற்றிலும் சேதமானது. காரில் சிக்கியவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு வந்து மரத்தை பவர் மெஷின் உதவியுடன் அறுத்து அகற்றி காரில் இருந்தவர்களை மீட்டனர். மழையால் மாவட்டம் முழுவதும் அபாயகரமான மரங்கள் ஊறி போய் எந்நேரத்திலும் விழும் நிலையில் இருப்பதால், மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு பணியை துரிதப்படுத்தி அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X