சுருளி அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : ஆக 09, 2022 | |
Advertisement
தேனி: தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு தொடர்வதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று (ஆக.,9) எட்டாவது நாளாக தடை தொடர்கிறது.மேகமலைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்து வந்தது. இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பி உள்ளன. இரவங்கலாறு பகுதியில் கடந்த ஆக.,1 தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆக.,2ல்
சுருளி அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தேனி: தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு தொடர்வதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று (ஆக.,9) எட்டாவது நாளாக தடை தொடர்கிறது.

மேகமலைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்து வந்தது. இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பி உள்ளன. இரவங்கலாறு பகுதியில் கடந்த ஆக.,1 தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆக.,2ல் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நிலைமையை கண்காணித்த வனத்துறையினர் ஆக.,2 முதல் அருவியில் குளிக்க தடை விதித்தனர். இன்று(ஆக.,9) எட்டாவது நாளாக, தடை தொடர்வதாக கம்பம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தடை காரணமாக, ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X