கூகுள் சேவை முடக்கம் : தவியாய் தவித்த நெட்டிசன்கள்..!| Dinamalar

கூகுள் சேவை முடக்கம் : தவியாய் தவித்த நெட்டிசன்கள்..!

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
மென்பொருள் புதுப்பிப்பு சிக்கலால் உலகம் முழுவதும் கூகுள் தேடல் சேவை, இன்று (ஆக.9) காலை சில மணி நேரம் முடங்கியது. பின்னர் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. நம் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ள கூகுளில், ஏதேனும் முக்கியமான தகவல்கள் குறித்து அறிந்து கொள்ள தேடுவது வழக்கம். இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் கூகுள் தேடல் முடங்கியது. அடுத்த சில மணி
கூகுள், Google Outage,முடக்கம், நெட்டிசன்கள், டிவிட்டர், Twitter, Software Update issue, Solve, மென்பொருள் புதுப்பிப்பு பிரச்னை, பிழை 500


மென்பொருள் புதுப்பிப்பு சிக்கலால் உலகம் முழுவதும் கூகுள் தேடல் சேவை, இன்று (ஆக.9) காலை சில மணி நேரம் முடங்கியது. பின்னர் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.நம் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ள கூகுளில், ஏதேனும் முக்கியமான தகவல்கள் குறித்து அறிந்து கொள்ள தேடுவது வழக்கம். இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் கூகுள் தேடல் முடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல டிராக்கிங் இணையதளமான டவுன் டிடெக்டர்.காம் கூறுகையில், 'ஆயிரக்கணக்கான பயனர்கள் இன்று கூகுள் தேடல் சேவை முடங்கியதாக தெரிவித்துள்ளனர். பயனர்கள் கூகுள் தேடலை பயன்படுத்துகையில், வேலை செய்யாமல் முடங்கியுள்ளது. மேலும்' உங்கள் வேண்டுகோளை ஏற்றுகொள்ள முடியவிலை. தயவு செய்து 30 நொடிகளுக்கு பிறகு முயற்சி செய்யவும்' என வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


latest tamil news


மேலும் சில பயனர்களுக்கு வித்தியாசமான பிழை என காட்டியுள்ளது. 'வருந்துகிறோம், ஆனால் உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்தும்போது இண்டர்னெல் பிழை ஏற்பட்டதாகத் தெரிகிறது. எங்கள் பொறியாளர்களுக்கு தகவலளித்து, சிக்கலைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தயவுசெய்து பிறகு முயற்சிக்கவும்” என கூறியுள்ளது.


கூகுள் சேவையின் தற்காலிகமாக முடக்கத்தால், அமெரிக்காவில் 30,000 பேரும், ஜப்பானில் 5,900 பேரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனை நெட்டிசன்கள் பலர் டிவிட்டரில், நகைச்சுவையுடன் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.கூகுள் தேடல் மட்டுமல்லாது மேப்ஸ், போட்டோஸ், டிரைவ் உள்ளிட்ட சேவைகளும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு , அயோவாவில் உள்ள கூகுள் டேட்டா சென்டரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இருக்கலாமென இணைய செய்தி நிறுவனமான எஸ்எஃப்கேட் (Sf gate) தெரிவித்துள்ளது. தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர். அதுவே உலகம் முழுவதும் செயலிழக்க காரணமாக இருக்கலாமென கூறப்பட்டது.

இதனிடையே கூகுள் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 'கூகுள் தேடல் மற்றும் மேப்ஸ் சேவையை பாதித்த மென்பொருள் புதுப்பிப்புச் சிக்கலை நாங்கள் அறிவோம். மேலும் சிரமத்திற்கு வருந்துகிறோம். சிக்கலை விரைவாகத் தீர்க்க நாங்கள் பணிபுரிந்தோம. எங்கள் சேவைகள் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X