மஹா., அமைச்சரவை விரிவாக்கம்: 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சிவசேனா சார்பில் 9 பேரும், பா.ஜ., சார்பில் 9 பேரும் என மொத்தம் 18 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனாவில் ஏற்பட்ட குழப்பத்தால், முதல்வர் பதவியில் இருந்து அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே
Maharashtra, Cabinet Expansion, Raj Bhavan, CM, Eknath Shinde, Dy CM, Devendra Fadnavis, மஹாராஷ்டிரா, அமைச்சரவை, விரிவாக்கம், அமைச்சர்கள், பொறுப்பேற்பு

மும்பை: மஹாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சிவசேனா சார்பில் 9 பேரும், பா.ஜ., சார்பில் 9 பேரும் என மொத்தம் 18 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனாவில் ஏற்பட்ட குழப்பத்தால், முதல்வர் பதவியில் இருந்து அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விலகினார். இதைத் தொடர்ந்து ஜூன் 30ம் தேதி முதல்வராக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிசும் பதவியேற்றனர். புதிய அரசு அமைந்து, ஒரு மாதத்துக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவுபடுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் இதை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.


latest tamil news




'சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தபோது, 32 நாட்களுக்கு ஐந்து பேர் மட்டுமே அமைச்சராக இருந்தனர். மிக விரைவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும்' என, தேவேந்திர பட்னவிஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மஹாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சிவசேனா சார்பில் 9 பேரும், பா.ஜ., சார்பில் 9 பேரும் என மொத்தம் 18 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோசியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202208:11:49 IST Report Abuse
  Venugopal S அப்பாடா,ஒரு வழியாக பங்கு பிரிக்கும் பிரச்சினை முடிந்து விட்டதா ? இனிமேலாவது மாநில நலன் மீது கவனம் செலுத்தி நல்ல ஆட்சி கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
09-ஆக-202214:59:55 IST Report Abuse
Rafi சில தகுதி இல்லாதவர்கள் கூட அலங்கார பதவிகளில் அமர வைக்கப்படும் தலைகுனிவுகளை சந்திக்கும் நிலையில் நாடு ஆகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X