நிரம்பி ததும்பும் அணைகளும், அதன் நீர்மட்ட அளவும்..!

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மேட்டூர் அணை:மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.44 லட்சம் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 1.22 லட்சம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம்
Dam, அணை, தண்ணீர் திறப்பு, முல்லை பெரியாறு


மேட்டூர் அணை:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.44 லட்சம் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 1.22 லட்சம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று (ஆக.,9) நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.05 அடியாக உள்ளது.


முல்லைப்பெரியாறு அணை:


latest tamil news


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த அணையின் மொத்தம் நீர்திறப்பு 9,704 கன அடியாக உள்ளன. இதிலிருந்து தமிழகத்திற்கு 2,144 கனஅடியும், கேரளாவிற்கு 7,560 கன அடி நீரும் திறக்கப்படுகின்றன.


அமராவதி அணை:


latest tamil news


உடுமலை: அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில் நீர்மட்டம் 87.44 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,816.07 மில்லியன் கனஅடியாகவும் உள்ளன. அணைக்கு வினாடிக்கு, 8,194 கனஅடி நீர்வரத்து வருகின்றன. அணையிலிருந்து, ஆற்றில், 7,300 கனஅடி நீரும், பிரதான கால்வாயில், 150 கனஅடி நீரும் திறக்கப்படுகின்றன.


கே.ஆர்.எஸ், கபினி அணை:

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வினாடிக்கு 74,068 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திறக்கப்படும் நீரின் அளவு 1,25,569 கன அடியிலிருந்து 1,35,726 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


சிறுவாணி அணை:


latest tamil news


கோவை மாவட்டம் சிற்றருவிகளில் இருந்து சிறுவாணி அணைக்கு தொடர் நீர் வரத்தால், தொடர்ந்து மூன்று நாட்களாக மதகுகளை, 50 செ.மீ., அளவு திறந்து தண்ணீரை வெளியேற்றப்படுகிறது. அதனால், நீர் மட்டம், 43 அடியாகவே இருக்கிறது.


ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து:


latest tamil news


கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆதலால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகின்றன. எனவே ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 31வது நாளாக தடை விதித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடியிலிருந்து 1.45 லட்சம் கன உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-ஆக-202215:31:59 IST Report Abuse
Natarajan Ramanathan எல்லா அணையிலிருந்தும் திறக்கப்படும் மொத்த நீரும் அப்படியே தமிழக அரசால் கடலில் திறந்துவிடப்படுகிறது....
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
09-ஆக-202213:41:26 IST Report Abuse
Raj எவனோ ஜோசியம் சொன்னான், திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வரட்சி நிலவுமுன்னு .....
Rate this:
Raa - Chennai,இந்தியா
09-ஆக-202214:44:30 IST Report Abuse
Raa...அதிக தண்ணியும் ஆபத்துதான்....
Rate this:
09-ஆக-202215:39:01 IST Report Abuse
ஆரூர் ரங்ஸ்டாலின் திறந்து விட்ட நீரால் இப்போது டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர் வெள்ள நீரில் மூழ்கி நாசம். வறட்சியை விட வெள்ளம்😪 கொடிது . ஏனெனில் பயிரிட ஆன செலவு அவ்வளவும் வீண்....
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-ஆக-202213:22:31 IST Report Abuse
சீனி பல்லாயிர மைல் மூலிகைகளை அடித்துக்கொண்டுவரும் இந்த தண்ணீர்ல் குளிப்பவர்களுக்கு சகல நோய்களில் இருந்தும் விடுதலை. அதற்க்கு தான் இந்து தர்மத்தில் ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீராடும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. அது தான் அர்த்தமுள்ள இந்துமதம், இது தான் சனாதன தர்மம். 'குவாட்டரே துணை' தான் திராவிடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X