ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன ஏஜன்ட் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, நிதி நிறுவன ஏஜன்ட் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வேலுார் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம், 8,000 ரூபாய் வட்டி வழங்கப்படும் என, அறிவித்திருந்தனர். இரண்டு மாதமாக வட்டி வழங்கவில்லை என்ற புகார்

வேலுார்: வேலுார் அருகே, நிதி நிறுவன ஏஜன்ட் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



வேலுார் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம், 8,000 ரூபாய் வட்டி வழங்கப்படும் என, அறிவித்திருந்தனர். இரண்டு மாதமாக வட்டி வழங்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, காட்பாடி, சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, அரக்கோணம் என, தமிழகம் முழுதும், 21 இடங்களில், வேலுார் மாவட்ட பொருளாதாரகுற்றப்பிரிவு போலீசார் கடந்த, 5ல் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.



தொடர்ந்து, நிதி நிறுவன ஊழியர்கள், ஏஜன்ட்டுகள் பட்டியலை தயாரித்தனர். இந்நிலையில், நிதி நிறுவன ஏஜன்ட் வேலுார் அருகே சேவூரைச் சேர்ந்த வினோத்குமார், 40, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனத்தில் ஏஜன்ட் மூலம் தான் முதலீடு செய்யப்பட்டது. வட்டி பணம் அந்தந்த ஏஜன்ட் மூலமாக, முதலீடு செய்தோருக்கு வழங்கப்பட்டது. முதலீடு செய்தவர்களுக்கும், நிதி நிறுவனத்திற்கும் தொடர்பில்லை.ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஏஜன்ட்டுக்கு, 8,000 ரூபாய் கமிஷன் வழங்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார் மூலம், 4,000க்கும் மேற்பட்டோர், 5 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.



வினோத்குமாரும், அவரது நிலத்தை விற்று, 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி கேட்டதால், மனமுடைந்த வினோத்குமார், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வினோத்குமார் எழுதிய கடிதத்தில், 'என் மூலமாக பலரது பணத்தை ஐ.எப்.எஸ்., நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளேன். அப்பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விடுங்கள். என்னை நம்பியவர்களுக்கு என் முடிவிலாவது பணம் கிடைக்கட்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.



தமிழகம் முழுதும், 10 ஆயிரம் ஏஜன்டுகள் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாயை, இந்த நிதி நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath - doha,கத்தார்
14-ஆக-202212:12:13 IST Report Abuse
sampath ஏமாற்றியவன் ரொம்ப புத்திசாலி காசுக்கு எதையும் தின்ன தயாரா இருக்கிற மக்களை நல்ல பயன்படுத்திக்கிட்டானுங்க அவ்வளவு பேராசை பிடிச்சி அலையுதுங்க முட்டாள் ஜனங்க , இப்படி நடக்கறது ஒன்னும் புதுசு இல்ல இனிமேல் நடக்காமல் இருக்கவும் போறதில்லை, நீ நடத்து நைனா ஒன பிசினஸ் ஜோரா
Rate this:
Cancel
09-ஆக-202214:56:36 IST Report Abuse
இ.வா இது முட்டாள்தனமான மக்களின் செயல் மாதம் 100,க்கு ஒரு ரூபாய்க்கு வட்டி அல்லது 100க்கு 2₹க்கு மேல் வட்டி என்பது தான் சாத்தியமான ஒன்று இப்படி 1 லட்சத்துக்க 8000 கொடுக்கவேண்டுமென்றால் 96 சதவீதம் வட்டி எப்படி சாத்தியம் என்று யோசிக்காமல் கொடுத்த மக்களை என்ன சொல்ல .பேராசை பெரு நஷ்டம் அடையவேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X