கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (ஆக.,9) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஒட்டிய மாவட்டங்கள்,
Heavy Rain, Nilgiri, Coimbatore, Weather, IMD chennai, கனமழை, நீலகிரி, கோவை, வானிலை

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (ஆக.,9) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், மேல் பவானி 22 செ.மீ, அவலாஞ்சி 19 செ.மீ, கூடலூர் பஜார் 17 செ.மீ, மழை பதிவாகியுள்ளன.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்றும், நாளையும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இப்பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-ஆக-202218:46:03 IST Report Abuse
Nagarajan D நம்ம வானிலை துறை என்ன சொன்னாலும் அது நடக்க போவிதில்லை.. இவனுங்க ரெட் அலெர்ட் கொடுத்தாலே அன்று வெய்யில் பட்டைய கிளப்பும் என கொள்ளலாம்.. கடந்த ஒரு வாரத்தில் இன்று தான் வானம் தெளிவாக இருந்தது
Rate this:
Cancel
சூனாபானா வானிலை ஹி ஹி இன்றுதான் கோவையில் நல்ல வெயில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X