ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு; பூட்டிய வீட்டில் துணிகரம்

Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கடலுாரில் பூட்டிய வீட்டில் புகுந்து, ரூ. 2 லட்சம் மதிப்பு நகைகள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் கூத்தப்பாக்கம், எஸ்.எஸ்.சுப்ராயன் நகரை சேர்ந்தவர் தங்கமேஸ்வரன், 62; இவர், கடந்த 6ம் தேதி, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தங்க நகைகள், 2 கிலோ

கடலுாரில் பூட்டிய வீட்டில் புகுந்து, ரூ. 2 லட்சம் மதிப்பு நகைகள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கடலுார் கூத்தப்பாக்கம், எஸ்.எஸ்.சுப்ராயன் நகரை சேர்ந்தவர் தங்கமேஸ்வரன், 62; இவர், கடந்த 6ம் தேதி, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது.



அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய்.இதுகுறித்து, தங்கமேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, வீடு புகுந்து திருடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
09-ஆக-202217:05:32 IST Report Abuse
T.Senthilsigamani வீட்டை பூட்டிய செய்தியை போலீசாருக்கு தெரிவித்தால் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X