ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (55+ 21) | |
Advertisement
பாட்னா: பீஹாரில் பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள முதல்வர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன்
BiharPoliticalCrisis, Nitish Kumar, Resigns, CM, Breaks, Alliance, BJP, பீஹார், முதல்வர், நிதிஷ்குமார், ராஜினாமா, பாஜக, பாஜ, கூட்டணி, முறிவு

பாட்னா: பீஹாரில் பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள முதல்வர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் வெளிபாடாக பிரதமர் மற்றும் மத்திய அரசின் நிகழ்ச்சிகளை, நிதிஷ்குமார் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். சமீபத்தில் பிரதமர் தலைமையில் நடந்த 'நிடி ஆயோக்' நிகழ்ச்சியையும் நிதிஷ்குமார் புறக்கணித்தார். மேலும், பா.ஜ., தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இனி சேரப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. இதனால் பா.ஜ., - ஐ.ஜ.த கூட்டணி முறிவது ஏறக்குறைய உறுதியானது.


latest tamil newsஇந்நிலையில், இன்று (ஆக.,9) மாலை 4 மணிக்கு கவர்னர் பகு சவுகானை சந்தித்த நிதிஷ்குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அளித்தார். இதனையடுத்து பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது. 'தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்களும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். இதனால் ராஜினாமா செய்தேன்' என்றார் நிதிஷ்குமார்.


latest tamil news


பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார். அவருடன் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உடன் சேர்ந்து கவர்னரை சந்தித்த நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன்மூலம் மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீஹார் சட்டசபைக்கு பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட அதிகமான இடங்களுடன் ஐ.ஜ.த - ரா.ஜ.த கூட்டணி (124 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன்) புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. இக்கூட்டணிக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (55+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202221:41:41 IST Report Abuse
Ganesh பிஜேபி இனி தனித்து போட்டியிடும். வெற்றியும் பெறும்
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
09-ஆக-202221:25:07 IST Report Abuse
Balasubramanyan This mandoesnot deserve respect. For power he will stoop down to any level. Biggest Yamaha. He is eyeing for PM Post. Rahul must be careful. Lingayat seer also have to be careful. Tomorrow he will ditch this govt and beg Modi to get another term. The worst state of affairs in Bihar is due to him. Joined hands with scam master Lallu party and congress.
Rate this:
Cancel
09-ஆக-202220:19:21 IST Report Abuse
ஆரூர் ரங் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..இந்த ஆள் அடுத்த லோக்சபா தேர்தல் நேரத்தில் பிஜெபி யிடம் மீண்டும் 😛ஒட்டிக் கொள்ள வருவான்.,(அதற்கு முன்பே கூட நடக்கலாம்). வெக்கங்கெட்ட பிறவி.
Rate this:
Karthikeyan - Trichy,இந்தியா
09-ஆக-202221:14:57 IST Report Abuse
Karthikeyanநல்லவேளை நிதிஷ்குமார் பிழைத்தார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X