குடும்பஸ்தனான செஸ் தம்பி

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
நான்கு வருடம் திட்டமிட்டு நடத்தக்கூடிய சர்வதேச சதுரங்க போட்டியை வெறும் நான்கே மாதத்தில் சிறப்பாக சென்னையில் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது,இதற்கு காரணமான இந்திய அரசையும் தமிழக அரசையும் வெகுவாக பாராட்டுவதாக தலைவர் டிகோர்விச் அறிவித்ததே நடந்து முடிந்த சதுரங்க போட்டிக்குகிடைத்த பெரிய வெற்றி எனலாம்.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் பத்துlatest tamil news


நான்கு வருடம் திட்டமிட்டு நடத்தக்கூடிய சர்வதேச சதுரங்க போட்டியை வெறும் நான்கே மாதத்தில் சிறப்பாக சென்னையில் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது,இதற்கு காரணமான இந்திய அரசையும் தமிழக அரசையும் வெகுவாக பாராட்டுவதாக தலைவர் டிகோர்விச் அறிவித்ததே நடந்து முடிந்த சதுரங்க போட்டிக்குகிடைத்த பெரிய வெற்றி எனலாம்.


latest tamil news


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் பத்து நாட்கள் நடந்து முடிந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பல சுவராஸ்யமான தகவல்கள்வெளிப்பட்டன.


latest tamil news


Advertisement

இருக்கு ஆனால் இல்லை என்ற நிலையில் கோவிட் சென்னையில் இருந்ததன் காரணமாக சர்வதேச விளையாட்டு வீரர்கள் யாவரும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள ரிசார்ட்சைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை இதன் காரணமாக களத்திற்கு வரும்போது படு உற்சாகமாக உடையணிந்து வந்தனர் அதிலும் உகாண்டா வீராங்கனைகளின்சிகை அலங்காரம் தனித்துவம் பெற்று திகழ்ந்தது அந்த கருப்பு முடியில் இல்லாத வண்ணமே இல்லை எனும்படி சாயம் பூசியிருந்தனர்.


latest tamil news


சதுரங்கபோட்டிக்கு வந்தார்களா அல்லது ஆடை அலங்கார போட்டிக்கு வந்தார்களா என்று யோசிக்கவைக்குமளவிற்கு பெண்கள் அணியினர் நவநாகரீக ஆடைஅணிந்துவந்ததிருந்தனர்.


latest tamil news


அனுமதிக்கப்பட்ட பதினைந்து நிமிடத்தில் யாரை எடுப்பது யாரை விடுவது என தெரியாமல் பத்திரிகை போட்டோகிராபர்கள் திக்கு முக்காடிப் போயினர் அதிலும் நடப்பு உலகசாம்பியன் மேக்னஸ் கார்னல்சன் ஒரு மூவிற்கும் இன்னோரு மூவிற்கும் இடையே இருக்கையைவிட்டு எழுந்து அரங்கத்திற்குள் பல இடங்களுக்கு உலா சென்றுவிட்டுவருவார் அவரை பாலோ செய்து படம் எடுப்பதற்கே தனியாக பத்து நிமிடம் போய்விடும்


latest tamil news


ஊருக்கு வெளியே சதுரங்க வளாகம் அமைக்கப்பட்டு இருந்தாலும் பார்வையாளர்கள் அதிகம் பணம் செலுத்தி போட்டிகளை காணவந்திருந்தனர்.சதுரங்க போட்டிஆரம்பிக்கும் போது தனியாக வேட்டி சட்டையும் காணப்பட்ட செஸ் தம்பி போட்டி நிறைவு பெறும் தருவாயில் மணைவி பிள்ளைகளுடன் குடும்பஸ்தனாக கும்பிடுபோட்டுக்கொண்டு நின்றார் பலரும் செஸ் தம்பி குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
உட்கார்ந்து சாப்பிட நேரமில்லாமல் ஒடிக்கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நீண்ட நேரம் மவுனத்திலேயே இருக்கவேண்டிய இந்த விளையாட்டில் மக்கள் அதிகம்ஆர்வம் காட்டுவது என்பது ஆச்சரியம்தான்.அதிலும் நுழைவுக் கட்டணம் அதிகம் செலுத்தி பார்க்க நீண்ட தொலைவில் இருந்து நிறைய பார்வையாளர்கள் தங்கள்குடும்பத்துடன் வருகை தந்திருந்தனர்.
சர்வதேச சதுரங்க போட்டி தமிழகத்திற்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது இந்த உற்சாகத்தோடு விளையாட்டுத் துறையை இன்னும் வேகமாக முடுக்கிவிட்டால் இளைஞர்கள்குறிப்பாக மாணவ,மாணவியர் ஆரோக்கியம் பெறுவர்.
-எல்.முருகராஜ்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - CHENNAI,இந்தியா
11-ஆக-202219:21:04 IST Report Abuse
sundaram ஆண்களுக்கு கட்டணம் இரண்டாயிரம் ருபாய். இது மிகவும் அதிகம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கட்டணம் இருநூறு ருபாய். இது என்ன லாஜிக் என்பது புரியவே இல்லை. இந்த விஷயத்தை எந்த பத்திரிகையும் குறிப்பிடவில்லை. போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற பிறகு டிக்கெட் எடுக்கவே பெரிய கூட்டம் நின்று கொண்டு இருப்பதை காண முடிந்தது. எத்தனையோ சினிமா மற்றும் ட்ராமா டிக்கெட்கள் online மூலம் எளிதாக கிடைப்பதுபோல் இதையும் நன்றாக கையாண்டு இருக்கலாம். பற்பல விஷயங்களில் மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில் அழகாக செயல் பட்டவர்கள் இது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X