திமுக.,வினரால் தமிழகத்திற்கு தலைகுனிவு: அண்ணாமலை

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை: 'கெலோ இந்தியா திட்டத்தை பற்றி எதுவுமே தெரியாமல் நிதிகளை பெற எந்தவித முயற்சியும் எடுக்காமல் பொய்களை பரப்பி வரும் திமுக.,வினரால் தமிழகத்திற்கு தலைகுனிவு' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.முன்னதாக, 'கெலோ இந்தியா' திட்டத்தின் கீழ், மத்திய அரசு விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் அதிகபட்சமாக
TamilnaduBJP, Khelo India, Tamilnadu, DMK, Annamalai, தமிழகம், பாஜக, பாஜ, அண்ணாமலை, தமிழ்நாடு, கெலோ இந்தியா, நிதி, திமுக, தலைகுனிவு

சென்னை: 'கெலோ இந்தியா திட்டத்தை பற்றி எதுவுமே தெரியாமல் நிதிகளை பெற எந்தவித முயற்சியும் எடுக்காமல் பொய்களை பரப்பி வரும் திமுக.,வினரால் தமிழகத்திற்கு தலைகுனிவு' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக, 'கெலோ இந்தியா' திட்டத்தின் கீழ், மத்திய அரசு விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் அதிகபட்சமாக குஜராத்திற்கு 608 கோடி ரூபாயும், உத்தரப் பிரதேசத்திற்கு 503 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. தமிழகத்திற்கு ரூ.33 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், இத்திட்டம் குறித்த விளக்கத்துடன் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


latest tamil news


கெலோ இந்தியா திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. ஆனால், இந்த திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்துகொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் பார்லி., உறுப்பினர்கள், திமுக.,வினரால் தமிழகத்திற்கு தலைகுனிவு.

மற்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ், மத்திய அரசிடம் நிதிப்பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தினர். மாநிலப் பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
12-ஆக-202217:31:10 IST Report Abuse
sankar ஒரு ஆக்கபூர்வமான சஜெஷன் கூட நீ இதுவரைக்கும் பதிவு செய்யலே. என்ன படிப்போ.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
12-ஆக-202217:10:17 IST Report Abuse
தமிழ்வேள் கெலோ இந்தியாவுக்கு பதில் ,ஊழல் இந்தியா என்று ஒரு திட்டம் துவங்கியிருந்தால் , முதல் இடம் , முழு அறிவு அனைத்தும் நம்ம திமுக வுக்கு மட்டும்தான் ,,,,அண்ணா வழியில் அயராது உழைப்பவர்களாயியிற்றே ...
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
11-ஆக-202210:03:58 IST Report Abuse
rameshkumar natarajan I was just glancing through the comments . One thing is very clear, all those who blame TN Government has hidden agenda. This same Dravidian government which is here for more than 50 years has brought many laurels. Kindly compare TN with all other developed states in India, you will appreciate what good Dravidian model has done for this people. Since, some people have enmity towards DMK for other reasons, you should not blame TN Government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X