இந்த 5 பழக்கங்களை பின்பற்றினால், நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்...!

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
உங்கள் வயது 20 முதல் 30க்குள் இருந்தால், இந்த 5 பழக்கங்களை பின்பற்றினால் கோடீஸ்வரராக மாறலாம்.1. முதலீடு..முதலீடு..முதலீடு : உங்களது வேலையோ அல்லது பிசினஸோ உங்களை ஒருபோதும் கோடீஸ்வரராக மாற்றாது. உங்களது சேமிப்பும், முதலீடும் மட்டுமே உங்களது சொத்து மதிப்பை தீர்மானிக்கும். மில்லியனர்கள் சராசரியாக 25 சதவீதம் தங்களது வருமானத்தை, ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்கின்றனராம்.
பணம், முதலீடு, கோடீஸ்வரர், பழக்கங்கள், நிதி சுதந்திரம், Financial Freedom, Money, Investment, Billionaire, 5 habitsஉங்கள் வயது 20 முதல் 30க்குள் இருந்தால், இந்த 5 பழக்கங்களை பின்பற்றினால் கோடீஸ்வரராக மாறலாம்.1. முதலீடு..முதலீடு..முதலீடு :உங்களது வேலையோ அல்லது பிசினஸோ உங்களை ஒருபோதும் கோடீஸ்வரராக மாற்றாது. உங்களது சேமிப்பும், முதலீடும் மட்டுமே உங்களது சொத்து மதிப்பை தீர்மானிக்கும். மில்லியனர்கள் சராசரியாக 25 சதவீதம் தங்களது வருமானத்தை, ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்கின்றனராம். இது உங்களுக்கு பல வழிகளில் வருமானத்தை பெருக்க உதவும்.


latest tamil news2. திட்டமிடுங்கள் :


நீங்கள் செய்ய வேண்டியவை குறித்த பட்டியலை உருவாக்கி, தொடர்ந்து செயலாக்கும் போது உங்கள் இலக்குகளை அடையலாம். உங்களுக்கு எண்ணங்கள் தோன்றும் பொழுதெல்லாம், அதை ஒரு நோட்டில் குறித்து வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் இலக்கிற்கான வாய்ப்புகளை கண்டறிய உதவும். மேலும் இலக்கை அடைய வலுவான வழியை அமைத்து தரும்.


latest tamil news3. வாழ்க்கைக்கான இலக்கை தீர்மானியுங்கள் :


பலர் தங்களுக்கு என்ன தேவை அல்லது என்னவாக விரும்புகிறோம் என்பது குறித்து அறியாமையில் உள்ளனர். வாழ்க்கையில் பல்வேறு தேர்வுகள் வரும் போது குழப்பமடைந்து விடுவார்கள். இது தவறான முடிவுகளை எடுக்க தூண்டும். சிறியதோ அல்லது பெரியதோ, உங்கள் இலக்கை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானதாகும்.

உங்களுக்கான இலக்கை தீர்மானித்து விட்டீர்கள் எனில், அதனை நிறைவேற்ற திட்டம் அவசியம். நீங்க என்ன சாதிக்க விரும்புகிறீர் ? எப்படி உங்கள் இலக்குகளை அடைவீர்கள் ? எப்போது உங்கள் இலக்குகளை அடைய விரும்புகிறீர்? படிப்படியாக இலக்கை அடைய திட்டம் வைத்திருந்தீர்கள் எனில் அதனை பின்பற்றுவது எளிதாக இருக்கும். இலக்கை அடைய கவனத்துடன் செயல்பட, தொடர்ந்து உந்துதலாக இருக்கும்.


4. செலவிடுவது நல்லது. ஆனால் சம்பாதிப்பது முக்கியம் :latest tamil newsபணக்காரராக மாற விரும்புவோர், உங்களுக்கான உரிய வருமான வழிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நீங்கள் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் இதர நிதி பத்திரங்களில் முதலீடு செய்து வரலாம். நீங்கள் நல்ல ஒரு பணியில் இருந்தால், உங்கள் வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை, வருமானத்தை பெருக்க மறு முதலீடு செய்ய வேண்டும்.


5. உங்கள் கடன்களை அடையுங்கள் :


உங்கள் கடன் தான் உங்களுடைய மிகப்பெரிய எதிரி. உங்கள் வருமானம் அனைத்தையும் கடன் முழுங்கி விடும். உங்களுக்கு வயதாகும் போது, பணம் சம்பாதிப்பது கடினமானதாக மாறும். 20 முதல் 30 வயது என்பது பணம் சம்பாதிப்பதற்கான பொற்காலம்.


latest tamil news


நீங்கள் அடமான கடன் வாங்கியிருந்தால், 45 வயதை எட்டும் முன், அதற்கு சற்று முன்னுரிமை கொடுத்து அடைக்க முயற்சியுங்கள். நீங்கள் கடனை அடைக்கும் போது, வட்டிக்கு போகும், மிகப்பெரிய தொகையை சேமிக்க இயலும்.


மேற்கூறிய பழக்கங்களை நீங்கள் இப்போது முதல் ஏற்று கொண்டு செயல்பட துவங்கினால், நீங்கள் நினைப்பதை விட விரைவிலேயே நிதி சுதந்திரத்தை அடைவீர்கள்.

வாழ்த்துகள்..!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
10-ஆக-202213:18:06 IST Report Abuse
Barakat Ali நன்று ......
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஆக-202210:14:31 IST Report Abuse
Sampath Kumar முக்கியமாக டாஸ்மாக் பக்கம் போகாதீங்க
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-ஆக-202210:06:00 IST Report Abuse
மலரின் மகள் Instead of investment focus on Savings. Don't follow the advise of the Author. It appears to promote share market. At the age of 20-30 a little money can be earned. Time is precious to learn, experiment, planning of life etc. Don't loose the little hard earned money in the share market that is influenced by so many parameters and cannot be understood on a shorter period. Many loose money or protect capital loss,very few gain little.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X