உ.பி.யில் பெண்ணை தாக்கிய விவகாரத்தில் ஸ்ரீகாந்த் தியாகி கைது

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
நொய்டா: உத்தர பிரதேசத்தில், குடியிருப்பு பகுதியில் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் அரசியல்வாதி என கூறிய ஸ்ரீகாந்த் தியாகியை இன்று போலீசார் கைது செய்தனர். .உ.பி.,யில், நொய்டாவின் 'கிராண்ட் ஓமேக்ஸ் சொசைட்டி' என்ற குடியிருப்பு பகுதியில், ஸ்ரீகாந்த் தியாகி என்பவர் வசித்து வருகிறார். இவர், பா.ஜ., பிரமுகர் என கூறி வந்துள்ளார். இதனை பா.ஜ., தரப்பு மறுத்துள்ளது. இவரது வீட்டுக்கு
Uttar Pradesh | #ShrikantTyagi arrested and brought to Noida Police Commissioner's office

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நொய்டா: உத்தர பிரதேசத்தில், குடியிருப்பு பகுதியில் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் அரசியல்வாதி என கூறிய ஸ்ரீகாந்த் தியாகியை இன்று போலீசார் கைது செய்தனர்.

.உ.பி.,யில், நொய்டாவின் 'கிராண்ட் ஓமேக்ஸ் சொசைட்டி' என்ற குடியிருப்பு பகுதியில், ஸ்ரீகாந்த் தியாகி என்பவர் வசித்து வருகிறார். இவர், பா.ஜ., பிரமுகர் என கூறி வந்துள்ளார். இதனை பா.ஜ., தரப்பு மறுத்துள்ளது. இவரது வீட்டுக்கு எதிரே உள்ள பொது இடத்தில், மரம் நடும் விவகாரம் தொடர்பாக, கடந்த ஆக.05-ம் தேதி ஸ்ரீகாந்த் தியாகிக்கும், அவரது வீட்டருகே வசிக்கும் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


latest tamil news





அப்போது, ஸ்ரீகாந்த் தியாகி அந்த பெண்ணை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். ஸ்ரீகாந்த் தியாகி மீது, பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய் அவரை போலீசார் தேடி வருகின்றனர். 'அவரை கைது செய்யும் போலீசாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும்' என, கவுதம் புத்தா நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அலட்சியமாகச் செயல்பட்ட ஆறு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இன்று ஸ்ரீகாந்த் தியாகியை மீரட் போலீசார் கைது செய்து பத்திரிகையாளர்கள் முன்பு ஆஜர்படுத்தினர்.


ஸ்ரீகாந்த் தியாகி வீடு இடிப்பு



நொய்டாவில் உள்ள குடியிருப்பு சொசைட்டியின் தரை தளத்தில், ஸ்ரீகாந்த் தியாகியின் வீடு உள்ளது. வீட்டுக்கு வெளியே உள்ள பொது இடத்தில், தற்காலிக கூரை அமைத்து அதை ஆக்கிரமித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அரசு அதிகாரிகள், 'புல்டோசர்' வைத்து நேற்று காலை அகற்றினர். அரசின் நடவடிக்கைக்கு, குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X