நொய்யல் ஆற்றில் வெள்ளம். மூன்று தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின

Added : ஆக 09, 2022 | |
Advertisement
காங்கேயம்:காங்கேயம் அருகே உள்ள மருதுறையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது.இதன் காரணமாக பொதுமக்கள் நத்தக்காடையூர் பகுதியில் இருந்து சென்னிமலை பகுதிக்கு செல்ல சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 172
நொய்யல் ஆற்றில் வெள்ளம். மூன்று தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின

காங்கேயம்:காங்கேயம் அருகே உள்ள மருதுறையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது.இதன் காரணமாக பொதுமக்கள் நத்தக்காடையூர் பகுதியில் இருந்து சென்னிமலை பகுதிக்கு செல்ல சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 172 கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரியில் நொய்யல் ஆறு கலக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீரானது திருப்பூர் நகரை கடந்து ஒரத்துப் பாளையம் அணையை அடைகிறது. தற்போது இந்த அணை பாசனத்துக்கு திறப்பதில்லை என்பதால் வரும் நீர் அப்படியே நொய்யல் ஆற்றில் செல்கிறது. நேற்று மாலை ஒரத்துப்பாளையம் அணைக்கு வினாடிக்கு 1240 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு செல்லும் நிலையில், திருப்பூர் ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே மருதுறை அருகே உள்ள தரைப்பாலம் மற்றும் கொங்குடையாம் பாளையம், வெங்கரையாம் பாளையம் அருகே உள்ள இரு தரைப்பாலம் என மூன்று தரைப்பாலங்களும் நீரில் மூழ்கியது.இதன் காரணமாக நத்தக்காடையூர் சென்னிமலை இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருதுறையில் நொய்யல் ஆற்றை கடக்க உயர்மட்ட பாலம் கட்ட கடந்த மாதம் ரூ.7.31 கோடியில் அமைச்சர் பூமி பூசை செய்து தொடங்கி வைத்தார். மண்ணை கொட்டி, தண்ணீர் செல்ல சிறிய குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தற்காலிக மண்ணால் ஆன பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X