மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
வாஷிங்டன்: அதிபர் மாளிகையில் சில ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக புகார் எழுந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.
Former US President Donald Trump's Florida home raided by FBI, Republican leader calls it prosecutorial misconduct

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: அதிபர் மாளிகையில் சில ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக புகார் எழுந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார்.


latest tamil newsஇந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப்பிற்கு சொகுசு பங்களா உள்ளது. இங்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர்.

ரெய்டு குறித்து எப்.பி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில், டெனால்டு டிரம்ப் தனது பதவி கால் நிறைவடையும் நிலையில் அதிபர் மாளிகையில் சில ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்று தனது புளோரிடா மாகாணத்தில் உள்ள சொகுசு பங்களாவில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை எடுத்துச்சென்றது குற்றம் என்பதால் இந்த ரெய்டு நடத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே டிரம்புக்கு எதிராக பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. வரும் 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அதிபராக பதவியேற்பேன் என டிரம்ப் சாவல் விடுத்துள்ள நிலையில், இந்த ரெய்டு சம்பவம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரெய்டு குறித்து டிரம்ப் கூறியது, எனது வீட்டில் சோதனை என்ற பெயரில் எப்.பி.ஐ. அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். எதற்காக இந்த ரெய்டு என்று தெரியவில்லை என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
10-ஆக-202200:00:07 IST Report Abuse
Fastrack ரொம்ப புலம்பாம ஒத்துழைப்பு தரணும் ..இல்லாட்டி ஐம்பது கிராம் கஞ்சா வைத்திருந்தார்னு பேப்பர்ல வரும் ..
Rate this:
Cancel
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202221:05:28 IST Report Abuse
Columbus USA now be like a third world country. Raids on opposition leaders are a symbol. The leftists in the deep state are doing everything to prevent Trump from contesting in the presidential election. The Democrats likely to lose heavily in the December congressional election.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
09-ஆக-202221:05:02 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி...நம்ம கட்டுமர கோபாலபுர குடும்ப வீடுகளில் ரெய்ட் செய்தால் அமெரிக்க அதிபர் டிரம்பின் சொத்து மதிப்பை விடவும் பல மடங்கு பணத்தை அள்ளலாம். ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X