செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் டிஜிட்டல் திரையில் இடம்பெற்ற முன்னாள் முதல்வர்கள் படங்கள்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: நான் சாம்பியன் ஆவேன் என நினைத்தது நிறைவேறியது என ஆனந்தும் போட்டியை திறம்பட நடத்தியதில் வரலாறு படைத்துள்ளோம் எனஅமைச்சர் மெய்யபநாதனும் கூறினர். சென்னையில் கடந்த ஜூலை 28 ம் தேதி துவங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று (ஆக.,9 ம் தேதி) நடைபெற்றது. விழாவில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.

சென்னை: நான் சாம்பியன் ஆவேன் என நினைத்தது நிறைவேறியது என ஆனந்தும் போட்டியை திறம்பட நடத்தியதில் வரலாறு படைத்துள்ளோம் எனஅமைச்சர் மெய்யபநாதனும் கூறினர்.latest tamil newsசென்னையில் கடந்த ஜூலை 28 ம் தேதி துவங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று (ஆக.,9 ம் தேதி) நடைபெற்றது.

விழாவில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது. இதனையடுத்து 44 வதுசெஸ் ஒலிம்பியாட்போட்டி குறித்த போட்டி இயக்குனர் பரத்சிங் சவுகான் வாசித்தார். மேலும் அனைத்து வீரர்களும் பத்திரமாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் இந்தியாவி்ன் முதல் கிராண்ட் மாஸ்டருக்கு ஸ்டாலின் மரியாதை அளித்தார். தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் பிற அமைச்சர்களுக்கு முதல்வர் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கண்டகனவு நனவானது: ஆனந்த்:


தொடர்ந்து சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றினார். இந்தியன் மற்றும் சென்னையை சேர்ந்தவன் என்ற பெருமையுடன் இங்கு நிற்கிறேன். சென்னையையும் செஸ் விளையாட்டையும் பிரிக்கமுடியாது. நேப்பியர் பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிபரவலாக விளம்ரம் செய்யப்பட்டது. செஸ் விளையாட துவங்கும் போது ஒரு நாள் சாம்பியன் ஆவேன் என நினைத்து விளையாடினேன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை திறம்பட நடத்தி முடித்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி. செஸ் ஒலிம்பியாட்தொடரில் தன்னார்வலர்கள் முகத்தில் புன்சிரிப்புடன் வேலைகளை செய்தனர் எனகூறினார்.


சிறந்த ஆடை அணிந்த நாட்டிற்கு பரிசு


தொடர்ந்து பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகைள் அணிந்து வந்த ஆடைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்ட்டடனர். நிகழ்ச்சியில் அங்கோலா சுவிட்சர்லாந்து இந்தியா இங்கிலாந்து நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சிறந்த ஆடை அணிந்த விருது வழங்கப் பட்டது. ஆண்களுக்கான பிரிவில் மங்கோலியா,உஸ்பெகிஸ்தான், நாட்டினருக்கு வழங்கப்பட்டது. பெண்களுக்கான சிறப்பான ஆடை விருது உகாண்டா அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஸ்டைலிஷ் அணி விருதை டென்மார்க் நாட்டின் மகளிர் அணிக்கு உதயநிதி எம்.எல்.ஏ.,வழங்கினார்.


செஸ் விளையாட்டின் தாயகம் சென்னை: துவார்கோவிச்


அர்கடி துவார்கோவி்ச் பேசுகையில் செஸ் விளையாட்டின் தாயகமான சென்னையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. நான்கு மாதத்தில் நடந்த அதிசயத்திற்காக நன்றி கூறுகிறேன். வீரர்களை பத்திரமாக அழைத்து சென்ற பேருந்து ஓட்டுனர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

போட்டியி்ல் அறத்துடன் விளையாடிய வீரருக்கான விருதை ஜமைக்கா வீரருக்கு தலைமை செயலாளர் இறையன்பு வழங்கினார்.


வரலாறு படைத்துள்ளோம்: அமைச்சர்


விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் நாம் வரலாறு படைத்துள்ளோம் என்பதை மனநிறைவு மற்றும் பெருமையுடன் கூறி கொள்கிறேன். சென்னை குறித்த நினைவுகளை வீரர்கள் அசை போடுவீர்கள் என நான் நம்புகிறேன். செஸ் ஒலிம்பியாட் போட்டி இமாலய வெற்றி பெற முதல்வரின் அயராத உழைப்பே காரணம் என கூறினார்.


வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுதொடர்ந்து தனி பிரிவில் வென்ற குகேஷ், நிகால்சரின் தங்கப்பதக்கம், அர்ஜூன் எரிகாசி வெள்ளிப்பதக்கமும் , தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலப்பதக்கம் வைஷாலி, தானியா, சச்தேவ்,திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கு வெண்கலப் பதக்கமும்வழங்கப்பட்டது.


தமிழ் மண் நிகழ்த்துகலை இரண்டாம் பாகம்


பின்னர் இந்திய விடுதலை குறித்து ஒலி ஒளி கண்காணட்சி ஒளிபரப்பப்பட்டது. தமிழ் மண் நிகழ்த்து கலையின் இரண்டாம் பாகம் கமல்ஹாசனின் பின்னணி குரலுடன் நிகழ்த்தி காட்டப்பட்டது. முதல்பாகம் போட்டியின் துவக்க விழாவில் நிகழ்த்தி காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போரில் தமிழ்நாடு விடுதலை வீரர்களின் பங்களிப்பு குறித்தும் வீடியோவில் இடம் பெற்றது. விழாவில் மருதநாயகம் வீரபாண்டிய கட்டபொம்மன் , வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோரின் வரலாறு நடித்து காட்டப்பட்டது.

அயோத்திதாசர் பண்டிதர்,பாரதியார், வ.உ.சி , பெரியார்,காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர் ஆகியோர் குறித்த வரலாறு கலை நிகழ்ச்சியில் இடம் பெற்றது.


latest tamil news
டிஜிட்டல் திரையில் முன்னாள் முதல்வர்கள் படம் @


@
நிறைவு விழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட முதல்வர்கள் மற்றும் அவர்களின் சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக டிஜிட்டல் திரையில் திரையிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202221:42:03 IST Report Abuse
Kasimani Baskaran ஈர வெங்காயம் மட்டுமல்ல முக கூட சுதந்திரத்துக்காக உழைத்தார் என்று உருட்டியிருப்பார்கள்... சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன ஒரு தேச விரோதியை சுதந்திரத்துக்காக பாடுபட்டதாக சொல்வதெல்லாம் ஓவரானது. இது டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டிய அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X