சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்த தயார்: முதல்வர்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை:சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்தவும் தமிழக அரசு தயாராக உள்ளது என செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். விழாவில்முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலை மேற்கோள் காட்டினார். அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு நடத்தி உள்ளது.

சென்னை:சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்தவும் தமிழக அரசு தயாராக உள்ளது என செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.latest tamil news

விழாவில்முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலை மேற்கோள் காட்டினார். அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு நடத்தி உள்ளது. தமிழ்நாடு செல்வாக்கு உலக நாடுகளி்ன் மத்தியில் உயரும் என நான் முன்பே கூறினேன். போட்டியில் வெற்றி பெற்றவர்களை காட்டிலும் நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக அரசு 102 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 18 துணை குழுக்கள் நியமிக்கப்பட்டன. சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகளுக்குபாராட்டுக்கள்.

சென்னையில் தங்கி இருந்த நாட்களை வீரர்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள் என நான் நம்புகிறேன். தமிழகத்தின் வரலாறு கலாச்சாரம் குறிப்பாக உணவு வகைகளை ரசித்திருப்பீர்கள் சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்தவும் தமிழகஅரசு தயாராக உள்ளது. சிலம்பாட்டத்திற்கு தேசிய அங்கீகாரம் பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உள்கட்டமைப்புகளை புதுப்பிக்க உள்ளோம்.சென்னையை வீரர்கள் மறக்க கூடாது.
அனைத்து வீரர்களும் அடிக்கடி சென்னைக்கு வரவேண்டும். அதற்குள் முடிந்து விட்டதாக என ஏங்க வைக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடந்தன. இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.


latest tamil newsபின்னர் செஸ் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப்பதக்கம், அர்மேனியாவிற்கு வெள்ளிபதக்கம் இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202216:18:56 IST Report Abuse
kulandai kannan அதுவும் பீச் வாலிபால் என்றால், முதல் வரிசை தான்.
Rate this:
Cancel
10-ஆக-202212:25:40 IST Report Abuse
ராமகிருஷ்ணன் செஸ் போட்டிகளில் திமுக கட்சியினர் நல்ல துட்டு பார்த்து விட்டார்கள் போல இருக்கு. அடுத்த சுருட்ட லுக்கு திட்டம் போடுகிறார்கள்.
Rate this:
Cancel
10-ஆக-202211:48:16 IST Report Abuse
அருணா முதலில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் காணாமல் போன ரோடுகள் சரி செய்யவும் நீர் வடிகால் வசதி(தொலைநோக்கில் வரவேண்டியவை) பாதாள சாக்கடை, முகாமில் தங்கியவருக்கு உணவுசெய்ய வேண்டியவை ஏராளம் முதலில் தமிழ் நாடு, தேசம், சர்வதேசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X