கேரள பெண்ணுக்கு சர்வதேச விருது

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 09, 2022 | |
Advertisement
கொச்சி: கேரளாவை சேர்ந்த ஒரு பெண், சர்வதேச பெண் தொழில் முனைவோர் விருது பெற்றுள்ளார்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா அபயன்,35. இவர், www.eweworld.com என்ற இணைய தளத்தை 2017ல் துவக்கினார். இதன் வாயிலாக கதர், கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை விவசாய பொருட்கள் ஆகியவற்றை உலக அளவில் விற்பனை செய்து வருகிறார். இவருடைய இணையதளம் வாயிலாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைப்
கேரள பெண்ணுக்கு சர்வதேச விருது

கொச்சி: கேரளாவை சேர்ந்த ஒரு பெண், சர்வதேச பெண் தொழில் முனைவோர் விருது பெற்றுள்ளார்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா அபயன்,35. இவர், www.eweworld.com என்ற இணைய தளத்தை 2017ல் துவக்கினார். இதன் வாயிலாக கதர், கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை விவசாய பொருட்கள் ஆகியவற்றை உலக அளவில் விற்பனை செய்து வருகிறார். இவருடைய இணையதளம் வாயிலாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைப் பொருட்கள் தயாரிப்போரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
தன் தொழில் வாயிலாக சமூக மாற்றத்தை ஏற்படுத்திய சங்கீதா அபயனுக்கு, 'ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ஹாங்காங்' என்ற அமைப்பு சர்வதேச பெண் தொழில் முனைவோருக்கான விருது வழங்கியுள்ளது. இந்த விருதுக்கு உலக அளவில் 225 பேர் பரிசீலிக்கப்பட்டனர். அதில் சங்கீதா அபயன் முதலிடம் பெற்றுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X