ஆம் ஆத்மி கட்சிக்கு கோவாவில் அங்கீகாரம்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி:கோவா சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி 6.77 சதவீதம் ஓட்டு வாங்கியதை அடுத்து, அக்கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 42 சதவீத ஓட்டுகளுடன் 92 இடங்களில் வெற்றி பெற்று
ஆம் ஆத்மி கட்சி  கோவா  அங்கீகாரம்

புதுடில்லி:கோவா சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி 6.77 சதவீதம் ஓட்டு வாங்கியதை அடுத்து, அக்கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 42 சதவீத ஓட்டுகளுடன் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.


latest tamil news



கடந்த பிப்ரவரியில் நடந்த கோவா சட்டசபை தேர்தலில், இக்கட்சி 6.77 சதவீத ஓட்டுகளை பெற்று, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆம் ஆத்மியை கோவாவின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் பகிர்ந்து கொண்டார். ''இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெறுவோம்,'' என, அவர் தெரிவித்தார். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகளையும், ஓட்டளித்த மக்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202213:13:36 IST Report Abuse
ராமகிருஷ்ணன் இந்த டூபாகூர் வளர்ச்சி அடைவது நாட்டுக்கு நல்லதல்ல. திராவிட சாயல் இவருக்கு இருக்கு.
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
10-ஆக-202212:08:35 IST Report Abuse
Mohan நாட்டின் நாலா பக்கத்தில் இருந்தும் விஷ கிருமிகள் பரவ தொடங்கி விட்டது. தெற்கே (விடியல்), வடக்கே (காஷ்மீர் அப்துல்லாக்கள்) , மத்தியில் (கெஜ்ரி) , கிழக்கே (மம்தா), மேற்கே (சரத் பவார்,உத்தவ் தாக்கரேயை) ..முளையிலேயே கிள்ளிவிடனும் இல்லே நாட்டையே விழுங்கிரும் இன்னும் 25 வருடத்தில் அதாவது 2047 ல் 100 ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது நம் நாடு முகலாயர் ஆட்சியோ இல்லே வத்திக்கான் ஆட்சியோ நடை பெற்று கொண்டிருக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X