ஆம் ஆத்மி கட்சிக்கு கோவாவில் அங்கீகாரம்| Dinamalar

ஆம் ஆத்மி கட்சிக்கு கோவாவில் அங்கீகாரம்

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
புதுடில்லி:கோவா சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி 6.77 சதவீதம் ஓட்டு வாங்கியதை அடுத்து, அக்கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 42 சதவீத ஓட்டுகளுடன் 92 இடங்களில் வெற்றி பெற்று
ஆம் ஆத்மி கட்சி  கோவா  அங்கீகாரம்

புதுடில்லி:கோவா சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி 6.77 சதவீதம் ஓட்டு வாங்கியதை அடுத்து, அக்கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 42 சதவீத ஓட்டுகளுடன் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.



latest tamil news


கடந்த பிப்ரவரியில் நடந்த கோவா சட்டசபை தேர்தலில், இக்கட்சி 6.77 சதவீத ஓட்டுகளை பெற்று, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆம் ஆத்மியை கோவாவின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் பகிர்ந்து கொண்டார். ''இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெறுவோம்,'' என, அவர் தெரிவித்தார். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகளையும், ஓட்டளித்த மக்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X