எக்ஸ்குளுசிவ் செய்தி

பழனிசாமிக்கு பதிலடியாக போட்டி கூட்டங்கள் : பன்னீர்செல்வம் ஆலோசனை

Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பழனிசாமி தரப்புக்கு பதிலடியாக போட்டி பொதுக் கூட்டங்கள், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடத்த, பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று நடந்த பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், செப்., ௧௫ முதல் சுற்றுப்பயணத்தை துவங்கவும் திட்டமிட்டுள்ளனர்.அ.தி.மு.க., தலைமை விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதல்வர்கள் பழனிசாமிக்கும்,
பதிலடியாக போட்டி கூட்டங்கள் :


பழனிசாமி தரப்புக்கு பதிலடியாக போட்டி பொதுக் கூட்டங்கள், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடத்த, பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று நடந்த பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், செப்., ௧௫ முதல் சுற்றுப்பயணத்தை துவங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க., தலைமை விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதல்வர்கள் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. பழனிசாமி தரப்பினர் நடத்திய, அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தன் ஆதரவாளர்களை, சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டலில், 45 மாவட்ட செயலர்கள், 25 மாநில நிர்வாகிகள் என, 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் வாரியத் தலைவர் லியாகத் அலிகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஜே.சி.டி.பிரபாகரன், கோவை செல்வராஜ் பங்கேற்றனர்.

இது குறித்து, பன்னீர்செல்வம் வட்டாரம் கூறியதாவது:தி.மு.க., அரசை கண்டித்து, சமீபத்தில் சென்னையில் பழனிசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பழநியில் பழனிசாமிக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு போட்டியாக, பொதுக்
கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.பழனிசாமிக்கு பதிலடி தரும் வகையில், பன்னீர்செல்வமும் தன் பலத்தை காட்ட விரும்புகிறார்; இதற்கான திட்டமும் வகுத்துள்ளார். செப்., 15ம் தேதி அண்ணாதுரையின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை, கொங்கு மண்டலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த கூட்டத்தில், 25 ஆயிரம் பேரை பங்கேற்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வரும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டமும், பொதுக்கூட்டமும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான சுற்றுப்பயணத்தை, சேலம் அல்லது கோவையில் இருந்து பன்னீர்செல்வம் துவங்க உள்ளார். கட்சியில் உள்ள 75 மாவட்டங்களில், 54 மாவட்டங்களுக்கு செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2௧ மாவட்ட செயலர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
10-ஆக-202209:58:12 IST Report Abuse
samvijayv நீங்க இருவரும் அதிமுக வளப்படுத்த முடியாளானாலும் பரவாயில்லை ஆனால், தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று கூறியவர்கள் மிக கடுமையாக எதிர் கட்சியாக செயல் படுவது வருகிற 2024ல் சட்டசபை தேர்தலில் திமுக - பிஜேபி இந்த இரு கட்சியே மட்டும் மக்கள் மத்தயில் இருக்கும்.
Rate this:
Cancel
c.k.sundar rao - MYSORE,இந்தியா
10-ஆக-202209:46:22 IST Report Abuse
c.k.sundar rao Ops in his own constituency does not have enough support as such is the case it's better for him to join ands with TTV & chinna atta .
Rate this:
Cancel
Prabhu - Kallakurichi,இந்தியா
10-ஆக-202207:07:58 IST Report Abuse
Prabhu உங்கள் செயல் வருத்தம் அளிக்கிறது. வெற்றி சின்னம் இரட்டை இலை சின்னத்தை அழிக்க நீங்கள் உதவி செய்வது போல இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X