சிவகங்கை : சிவகங்கையில் இலந்தங்குடியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளால்விபத்து அபாயம் இருப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் காரணமாக மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை உயர்த்தி கட்டியுள்ளதால்மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இலந்தங்குடியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியால் கிராம மக்கள் அப்பகுதிகளுக்கு செல்ல அச்சம் கொண்டனர்.
விவசாயிகள் விவசாய பணிகள் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து செய்தி இரு தினங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டது. உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் இலந்தங்குடி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை உயர்த்தி கட்டினர். இதன் காரணமாககிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.