சிறுபான்மையினர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Added : ஆக 10, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி :சிறுபான்மையினரை மாவட்ட அளவில் அடையாளம் காண வழிகாட்டுதல்களை வகுக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது சட்டத்துக்கு முரணானது என உத்தரவிட்டது.உத்தர பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த தேவகிநந்தன் தாக்குர் என்பவர்,உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், 'சிறுபான்மையினரை அடையாளம் காண்பது மாநில அரசின் உரிமை என்றாலும், மாவட்ட அளவில்
சிறுபான்மையினர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி :சிறுபான்மையினரை மாவட்ட அளவில் அடையாளம் காண வழிகாட்டுதல்களை வகுக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது சட்டத்துக்கு முரணானது என உத்தரவிட்டது.உத்தர பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த தேவகிநந்தன் தாக்குர் என்பவர்,உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், 'சிறுபான்மையினரை அடையாளம் காண்பது மாநில அரசின் உரிமை என்றாலும், மாவட்ட அளவில் அவர்களை அடையாளம் காண வழிகாட்டுதல்களை வகுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், 'இதில் கோரப்பட்டு இருக்கும் விஷயம் சட்டத்துக்கு புறம்பானது.


latest tamil news




'மதம் மற்றும் மொழி அளவிலான சிறுபான்மையினர் அந்தஸ்து, மாநில அளவில் தான் வழங்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டது.வழக்கு விசாரணையை, நிலுவையில் உள்ள இதர மனுக்களுடன்சேர்த்து, அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.அப்போது, நாட்டின், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால், சிறுபான்மையினரை மாநில அளவில் அடையாளம் காண வழிகாட்டுதல் வகுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, வேறு அமர்வில் நிலுவையில் இருப்பது குறித்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
'இந்த விவகாரத்தில், பொதுவான உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
10-ஆக-202214:43:49 IST Report Abuse
Nellai tamilan இருபது சதவீதம் இருப்பவர்கள் எப்பிடி சிறுபான்மையினர் ஆக முடியும். நீதிமன்றம் நியாயமாக நடந்து கொண்டால் நாடு நலம் அடையும்
Rate this:
Cancel
10-ஆக-202211:21:00 IST Report Abuse
அப்புசாமி பேஷ்... பேஷ்.. அஞ்சு கோடி ஒரு வழக்காக நிலுவையில் சேத்திர வேண்டியதுதான்.
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
10-ஆக-202210:23:32 IST Report Abuse
suresh kumar இப்போதைய தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன் வழக்கம்போல் விவகாரமான தீர்ப்பு வழங்க, இந்த வழக்கு அமையுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X