சீனாவுக்கு அடிபணிய மாட்டோம் தைவான் அமைச்சர் உறுதி

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தைபே : “சீனாவின் முயற்சி பலிக்காது; நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்,” என, தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ கூறினார்.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, நான்சி வந்து சென்ற மறுநாளில் இருந்து, தென் சீன கடலில், தைவான்
சீனா, தைவான், போர், எச்சரிக்கை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


தைபே : “சீனாவின் முயற்சி பலிக்காது; நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்,” என, தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ கூறினார்.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார்.


latest tamil news



இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, நான்சி வந்து சென்ற மறுநாளில் இருந்து, தென் சீன கடலில், தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை துவக்கியது.'பயிற்சி நான்கு நாள் நடக்கும்' என, முதலில் அறிவித்த சீனா, அதை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ நேற்று கூறியதாவது:தைவான் ஜலசந்தியில், போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது.


latest tamil news



தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா, கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதியை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. தைவானில் இருந்து சில உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. தைவானை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் சீனாவின் முயற்சி பலிக்காது. நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம். தைவான் ராணுவத்தின் தயார் நிலையை சோதனை செய்யும் பயிற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202212:21:57 IST Report Abuse
ராமகிருஷ்ணன் எங்களுக்கு உங்க எல்லோர் முகமும் ஒரே மாதிரி தான் தெரியுது. ஏதாவது ஒப்பந்தம் செய்து தப்பிக்க பாருங்க. 😜
Rate this:
Cancel
10-ஆக-202210:20:36 IST Report Abuse
பேசும் தமிழன் அமெரிக்கா பேச்சை கேட்டு சீரழிந்த நாடுகள் ஏராளம்.... அதற்கு சமீபத்திய உதாரணம்... உக்ரைன்.... தைவான் சுதாரித்து கொள்வது நல்லது
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
10-ஆக-202208:29:28 IST Report Abuse
J. G. Muthuraj தைவான் எப்படி துணிஞ்சி பேசுது பாருங்க....சீன உளவுக்கப்பல் ஊடுருவலையே இந்தியாவினால் தடுக்க முடியவில்லை....இந்திய கடற்படை தமிழகத்தை ஒட்டிய எல்லைகளில் இருக்காது என்று சீனாவுக்கு தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X