சுவாமிமலை ஸ்தபதி வீட்டில் எட்டு சிலைகள் பறிமுதல்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே, சுவாமிமலையில் ஸ்தபதி ஒருவரின் வீட்டில் இருந்து, 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலை உட்பட எட்டு பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று, ஸ்தபதி மாசிலாமணி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த எட்டு பஞ்சலோக
சுவாமிமலை ஸ்தபதி,  வீட்டில், எட்டு சிலைகள், பறிமுதல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே, சுவாமிமலையில் ஸ்தபதி ஒருவரின் வீட்டில் இருந்து, 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலை உட்பட எட்டு பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று, ஸ்தபதி மாசிலாமணி வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த எட்டு பஞ்சலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள், மாசிலாமணி வீட்டின் முன் திரண்டு, 'சிலைகள் இங்கு செய்யப்பட்டவை; அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது' எனக்கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news



ஸ்தபதி மாசிலாமணி மகன் கவுரி சங்கர் கூறியதாவது:இங்கிருந்து எடுக்கப்பட்ட சிலைகள் நாங்கள் உருவாக்கியது. நாங்கள் செய்த சிலையை, போலீசார் பழங்கால சிலை எனக்கூறி, எடுத்துச் சென்று விட்டனர். எவ்வளவோ கூறியும், அவர்கள் கேட்கவில்லை.நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழில் செய்கிறோம். இந்த சிலையை, எங்களை மீறி வலுக்கட்டாயமாக எடுத்து சென்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
10-ஆக-202212:40:49 IST Report Abuse
ANANDAKANNAN K நீங்கள் செய்த சிலை தான் என்றால் ஏன் பதற வேண்டும், அதற்க்கு உண்டான உலோகத்தின் கொள்முதல் செய்த ஒரிஜினல் பில் காட்ட வேண்டியது தானே, இது இல்லாமல் மாற்று அந்நிய சக்திகள் வேலை இருக்குமானால் ஸ்தபதிகள் போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் நீதி மன்றம் செல்ல வேண்டும், இனிமேலும் துண்டு ஷீட்டில் வரி செலுத்தாமல் பொருள் வாங்கினால் இப்படி வாரி சென்று விடுவார், தன் பொருளை கூட காப்பாத்த முடியாது, இந்த மாதிரி உலோக சிலைகள் செய்யும் போது ஆவணம் முக்கியம்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10-ஆக-202212:22:31 IST Report Abuse
sankaranarayanan ஸ்தபதிகளின் குடும்பத்தை அறவே ஒழித்துக்கட்டுவது ஒரே தீர்மானமா இந்த திருவிழா அரசுக்கு?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
10-ஆக-202211:01:07 IST Report Abuse
raja திருட்டு திராவிடர்கள் இப்போ கோயில்களை விட்டு ஸ்தபதி வீட்டிலியும் சிலையை திருடுகிறார்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X