பெரியாறு அணைக்கு நீர் வரத்து 12,616 கன அடியாக அதிகரிப்பு; 10,400கன அடிநீர் வெளியேற்றம்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கூடலுார்: பெரியாறு அணை நீர் பிடிப்பில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,616 கனஅடியாக அதிகரித்தது. இதனால் கேரள பகுதிக்கு 13 ஷட்டர்கள் வழியாக 10,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 21.2 மி.மீ., பெரியாறில் 69.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி அணைக்கு அதிகபட்சமாக நீர்வரத்து வினாடிக்கு 12,616 கன அடியாக
பெரியாறு அணை, நீர் வரத்து, கன அடிநீர், வெளியேற்றம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கூடலுார்: பெரியாறு அணை நீர் பிடிப்பில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,616 கனஅடியாக அதிகரித்தது. இதனால் கேரள பகுதிக்கு 13 ஷட்டர்கள் வழியாக 10,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 21.2 மி.மீ., பெரியாறில் 69.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி அணைக்கு அதிகபட்சமாக நீர்வரத்து வினாடிக்கு 12,616 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டமும் உயர்ந்து 139.6 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). ரூர்கர்வ் விதிமுறைப்படி ஆக. 31 வரை 139.80 அடியாக நிலை நிறுத்தலாம் என்ற நிலையில் கேரள பகுதிக்கு மேலும் 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு மொத்தமுள்ள 13 ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 10,400 கன அடி வெளியேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் மாலையில் கேரளப் பகுதிக்கு 7246 கன அடி வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் இடுக்கி மாவட்டம் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புதுரா, சப்பாத்து வழியாக செல்லும் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


latest tamil newsஇதற்காக 30க்கும் மேற்பட்ட இடத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 2216 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 7025 மில்லியன் கன அடியாகும்.


அதிகாரிகள் ஆய்வு


பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதை தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஸ்துநேசகுமார் தலைமையிலான அதிகாரிகள் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் ஷட்டர் பகுதிகளை ஆய்வு செய்தனர். அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு வைகை கோட்ட பொறியாளர் அன்பு செல்வம், உதவி செயற்பொறியாளர்கள் குமார், மயில்வாகனன், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மாயகிருஷ்ணன், முரளிதரன், நவீன் குமார் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
10-ஆக-202212:10:38 IST Report Abuse
mindum vasantham இங்கே பரமகுடியெல்லாம் தண்ணீர் வரவில்லை வைகையில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X