அடுத்தடுத்து விடுமுறை வேண்டாம்; கலெக்டருக்கு மாணவி கோரிக்கை

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
வயநாடு : 'அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்க வேண்டாம்' என வயநாடு கலெக்டரிடம் உள்ளூர் மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், மாணவ - மாணவியர் ஜாலியாக கொண்டாடுவர் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், கேரளாவில் ஒரு மாணவி, எல்லாரும் விடுமுறையை கொண்டாட மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.வயநாட்டில் கனமழை
விடுமுறை வேண்டாம், கலெக்டருக்கு மாணவி கோரிக்கை, வயநாடு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


வயநாடு : 'அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்க வேண்டாம்' என வயநாடு கலெக்டரிடம் உள்ளூர் மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், மாணவ - மாணவியர் ஜாலியாக கொண்டாடுவர் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், கேரளாவில் ஒரு மாணவி, எல்லாரும் விடுமுறையை கொண்டாட மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.

வயநாட்டில் கனமழை காரணமாக வார விடுமுறைக்குப் பின், நேற்று முன்தினமும், நேற்றும், மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்ததால், தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை. இதையடுத்து, சபூரா நவுஷத் என்ற ஆறாம் வகுப்பு மாணவி, 'இன்றைக்கும் விடுமுறை அறிவித்து விட வேண்டாம்; தொடர்ந்து நான்கு நாட்கள் வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது' என மாவட்ட கலெக்டர் கீதாவுக்கு 'இ - மெயில்' அனுப்பினார்.


latest tamil news



உடனே அந்த கலெக்டர் மாணவியை வாழ்த்தியதுடன், அந்த மெயிலை தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் பகிர்ந்தார். இந்நிலையில், அந்த மாணவியின் கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10-ஆக-202211:51:03 IST Report Abuse
தமிழ்வேள் இந்த பெண்ணுக்கு விடுமுறை தேவை இல்லை என்றால், தான் மட்டும் பள்ளி மெயின் கேட்டின் கீழ் சென்று அமரட்டும்..லீவு வேண்டாம் என்று பொதுவான பினாத்துவதெல்லாம் ரொம்ப ஓவர் ......தேவைப்பட்டவன் விடுமுறை எடுத்துக்கொள்வதில் என்ன மனத்தடை ?? சும்மா வெறும் பந்தாவுக்காக ஒரு கடிதம் .....
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
10-ஆக-202210:16:49 IST Report Abuse
suresh kumar தொடர்ச்சியாக வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லையாதலால் புதனன்று விடுமுறை வேண்டாமாம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
10-ஆக-202207:54:59 IST Report Abuse
Girija மாணவியின் பெற்றோர்களின் வெத்து விளம்பர மோகம் நம்பும்படியாக இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X