வர வேண்டாம் என கூறிய பின்னும் மீறி வரும் சீன உளவு கப்பல்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி : வருகையை ரத்து செய்யுமாறு இலங்கை அரசு கூறிய பிறகும், சீனாவின் உளவு கப்பல், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவின், 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில், நான்கு நாட்கள் நிறுத்த சீனா திட்டமிட்டது. இந்த கப்பல் வாயிலாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் ராணுவ
சீன உளவு கப்பல், யுவான் வாங் 5, அம்பன்தோட்டா,


புதுடில்லி : வருகையை ரத்து செய்யுமாறு இலங்கை அரசு கூறிய பிறகும், சீனாவின் உளவு கப்பல், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின், 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில், நான்கு நாட்கள் நிறுத்த சீனா திட்டமிட்டது. இந்த கப்பல் வாயிலாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் ராணுவ கட்டமைப்புகளை உளவு பார்க்க, சீனா திட்டமிட்டுள்ளதாக கருதப்பட்டது.


latest tamil news



இதையடுத்து, அந்த கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம் என, அந்நாட்டு அரசுக்கு நம் அரசு கோரிக்கை விடுத்தது.இதையடுத்து, யுவான் வாங் 5 கப்பலின் வருகையை ரத்து செய்யுமாறு, சீன வெளியுறவுத் துறையிடம் இலங்கை அரசு தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், இந்தியாவின் நடவடிக்கையை சீனா மறைமுகமாக விமர்சித்தது. இந்நிலையில், நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா கடற்கரைக்கு மேற்கில், மணிக்கு 26 கி.மீ., வேகத்தில், அந்த உளவு கப்பல் இலங்கையை நோக்கி பயணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு, இந்திய நேரப்படி நாளை காலை 9:30 மணிக்கு, அந்த கப்பல் வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
10-ஆக-202215:13:57 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி அம்பானிக்கு 5G அலைக்கற்றை உபகரணங்களை சீனாவிலிருந்து எடுத்து வருவதற்கு வழித்தடங்களை ஆராய வரும் கப்பலாக இருக்கலாம். எனவே இங்கிருத்து ஏவுகணை வீசுவதற்கோ, அணுகுண்டு போடுவதற்கோ தேவையிராது. 😷
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
10-ஆக-202214:49:06 IST Report Abuse
CBE CTZN சீனாவிடம் மட்டும் நம் ராணுவபலத்தை ஒருமுறை காண்பித்தால், இந்த பக்கமே வரமாட்டான்.. அருணாச்சலப்பிரதேசத்துல பாத்தியா புடுச்சுட்டான், இலங்கை வழியே வந்து தென் இந்தியாவை பிடிக்கப்போறான்.. இந்தியா ராணுவம் வீறு கொண்டு எழவேண்டிய நேரம் இது
Rate this:
Cancel
10-ஆக-202213:45:18 IST Report Abuse
N Sasikumar Yadhav பிரமோஸ் ஏவுகனை விட்டு குறிப்பிட்ட இலக்கை சரியாக தாக்குகிறதா என சோதனை செய்யனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X