அங்கீகாரம் இல்லை; தி.மு.க., மகளிரணி புலம்பல்: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கோவை: 'கோவையில் மகளிரணியினருக்கு உரிய அங்கீகாரம் இல்லை' என ஆலோசனை கூட்டத்தில் குமுறிய நிர்வாகிகளுக்கு, கூட்டுறவு சங்க தேர்தலில் வாய்ப்பு அளிப்பதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் கூறினார்.தி.மு.க., இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்று நடந்தது.அதில், மகளிரணி நிர்வாகிகள் பேசியதாவது:முதல்வர் பங்கேற்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: 'கோவையில் மகளிரணியினருக்கு உரிய அங்கீகாரம் இல்லை' என ஆலோசனை கூட்டத்தில் குமுறிய நிர்வாகிகளுக்கு, கூட்டுறவு சங்க தேர்தலில் வாய்ப்பு அளிப்பதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் கூறினார்.



latest tamil news




தி.மு.க., இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்று நடந்தது.அதில், மகளிரணி நிர்வாகிகள் பேசியதாவது:

முதல்வர் பங்கேற்கும் கூட்டத்துக்கு வாகன வசதி செய்து கொடுங்கள்; பூத்துக்கு, 1,000 பேர் அல்ல; 5,000 பேரை அழைத்து வருகிறோம். எங்களுக்கு ஒன்றிய செயலாளர்களின் ஒத்துழைப்பு தேவை. சில இடங்களில் பகுதி கழக செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மிரட்டுகின்றனர். எங்களை மீறி, நீங்கள் கூட்டம் நடத்துகிறீர்களா என கேட்கின்றனர். சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறோம். எங்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுங்கள்.
இவ்வாறு, நிர்வாகிகள் பேசினர்.


latest tamil news




அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
உள்ளாட்சி தேர்தலுக்கு பின், சில இடங்களில் சங்கடங்கள் உருவாகியிருக்கின்றன. விரைவில் தீர்வு காணும் நடவடிக்கை இருக்கும். கூட்டுறவு சங்க தேர்தலில் மகளிருக்கு நிச்சயம் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின், 23ல் கோவை வருகிறார்; 24ம் தேதி மாலை, பொள்ளாச்சியில் நடக்கும் விழாவில், மாற்றுக்கட்சியினர் இணைகின்றனர். பொள்ளாச்சி கூட்டத்தில், 50 ஆயிரம் இருக்கை போடப்போகிறோம்; 25 ஆயிரம் இருக்கை பெண்களுக்கு ஒதுக்கப்படும். லோக்சபா தேர்தலில், ஆண்களுக்கு இணையாக பெண்கள் களத்தில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
10-ஆக-202217:43:39 IST Report Abuse
Soumya நம்பிள் விடியல் தெய்வ குடும்பத்துக்கு போக மிச்சமிருந்தா போடுறோம் விலேஜ் விஞ்ஞானி அணில்
Rate this:
Cancel
Tc Raman - Kanchipuram,இந்தியா
10-ஆக-202217:11:38 IST Report Abuse
Tc Raman தமிழ் நாட்டின் ஷின்டே உருவாகிறார். மகளை அணி தலைவியின் தூதராக
Rate this:
Cancel
கட்டத்தேவன்,,திருச்சுழி தலைக்கு இருநூறு ரூவா கொடுத்தாலும் ஐம்பதாயிரம் பேருக்கு என்றால் எவ்வளவு 50000×200=10000000.ஒரு கோடியெல்லாம் பாக்கெட் மணி மாதிரி அணிலுக்கு இதெல்லாம் சாதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X