லாரி, லாரியாக குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி: விலை குறைந்ததால் 'வேஸ்ட்'

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை: தக்காளி விலை அதளபாதாளத்துக்கு சென்றதால், செய்வதறியாது திகைத்த வியாபாரிகள் விற்க மனமின்றி, குப்பையில் வீசி எறிந்தனர்.கோவை எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டிற்கு, கர்நாடக மாநிலத்தின் கொள்ளேகால், மைசூர் பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் ஓசூர் காவேரிப்பட்டினத்திலிருந்தும் தினமும், ஐந்து முதல் பத்து லோடு தக்காளி,விற்பனைக்கு வரும்.இது தவிர, கோவை புறநகரான சென்னனுார்,

கோவை: தக்காளி விலை அதளபாதாளத்துக்கு சென்றதால், செய்வதறியாது திகைத்த வியாபாரிகள் விற்க மனமின்றி, குப்பையில் வீசி எறிந்தனர்.



latest tamil news




கோவை எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டிற்கு, கர்நாடக மாநிலத்தின் கொள்ளேகால், மைசூர் பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் ஓசூர் காவேரிப்பட்டினத்திலிருந்தும் தினமும், ஐந்து முதல் பத்து லோடு தக்காளி,விற்பனைக்கு வரும்.

இது தவிர, கோவை புறநகரான சென்னனுார், மாதம்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்துார், பாலத்துறை, கிணத்துக்கடவு பகுதிகளிலிருந்தும், தக்காளி விற்பனைக்கு வரும். கடந்த சில தினங்களாக, மார்க்கெட்டிற்கு வழக்கத்திற்கும் அதிகமாக தக்காளி வரத்து இருந்தது. தொடர் மழை காரணமாக, தக்காளியை இருப்பு வைத்து வியாபாரிகளால் விற்பனை செய்யமுடியவில்லை. விலையும் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சரிவைத்தொட்டது.


latest tamil news




25 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர், 125 ரூபாய்க்கு விலை போனது. அப்போது மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய். சில்லறையில், 7 முதல் 10 ரூபாய் வரைதான் விற்பனையானது.விலை சரிவை தொட்டதால், இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத வியாபாரிகள், வேறு வழியின்றி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளை கொட்டும் பகுதியில், குப்பையோடு குப்பையாக தக்காளியையும், லாரி லாரியாக கொண்டு வந்து கவிழ்த்தனர். மார்க்கெட்டுக்கு வந்திருந்த விவசாயிகள், இதைக் கண்டு மனம் வருந்தினர்.


கொட்டுவதை தவிர வேறு என்ன செய்வது?



ஒவ்வொரு ஆண்டும், மூன்று முறை தக்காளி விலை சரிவை தொடும். ஆடி மாதம் மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், தக்காளியை இருப்பு வைப்பது சிரமம். எளிதில் அழுகிவிடும். அதனால் விரைவாக விற்று விடுவோம்; மீதமானதை கொட்டி விடுவோம். வேறு என்ன செய்வது? - பழனிச்சாமி, தலைவர் எம்.ஜி.ஆர்., மொத்த காய்கறி மார்க்கெட் சங்கம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
10-ஆக-202213:13:19 IST Report Abuse
Narayanan Why these people are not givin to public with small price, instead of throwing to ground you can give it to public with small rate ??.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-ஆக-202213:05:01 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இதை போலவே முருங்கை காய்க்கும் நடக்கும். விவசாயிகள் புதிய முறைகளில்/வழிகளில் விரயத்தை குறைக்க வேண்டும். வீணாக தெருவில் கொட்டுவதற்கு பதில், ஏழை எளிய மக்களுக்கு, அநாதை ஆசிரமங்களுக்கு , முதியோர் இல்லங்களுக்கு இலவசமாக தரலாமே. சென்னையில் நேற்று கிலோ தக்காளி இருபது ரூபாய் (குரோம்பேட்டையில்) விலையில் வாங்கினேன். தக்காளி சூப் என்பது ஸ்டார் ஹோட்டல்களில் மிக பிரசித்தம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
10-ஆக-202211:31:24 IST Report Abuse
raja வியாபார நோக்கோடு தக்காளி ஜூசு செய்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கலாமே.. எத்தியோபியன் ஏர் லயன்சில் பயணிகளுக்கு தக்காளி ஜூஸ் தருகிறார்கள்....துக்ளக் விடியல் டக்லஸ் அமைச்சன் இதுக்கெல்லாம் நிதி இல்லைன்னு சொல்லுவான் ... கடலில் கட்டுமரத்தில் பேணா சிலைவைக்க மக்கள் பணம் 80 கோடியை கொட்டுவானுவோ ... கேடுகெட்ட விடியல் தமிழகத்துக்கு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X