குமரி - காஷ்மீர் நடைபயணம்: செப்.,7ல் ராகுல் துவங்குகிறார்

Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
திருநெல்வேலி : காங்., முன்னாள் தலைவர் ராகுல், காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை கன்னியாகுமரியில் செப்., 7ல் துவங்க உள்ளதாக காங்., தமிழக தலைவர் அழகிரி தெரிவித்தார்.மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காங்., சார்பில் நடை பயணங்கள் நடக்கின்றன. தமிழக தலைவர் அழகிரி நேற்று காலை தென்காசியில் நடைபயணத்தை துவக்கி வைத்தார்.நேற்று மாலை திருநெல்வேலி வந்த அவர்
Congress,Rahul,Rahul Gandhi,Kashmir, காங்கிரஸ்,காஷ்மீர்,ராகுல்,ராகுல் காந்தி

திருநெல்வேலி : காங்., முன்னாள் தலைவர் ராகுல், காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை கன்னியாகுமரியில் செப்., 7ல் துவங்க உள்ளதாக காங்., தமிழக தலைவர் அழகிரி தெரிவித்தார்.

மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காங்., சார்பில் நடை பயணங்கள் நடக்கின்றன. தமிழக தலைவர் அழகிரி நேற்று காலை தென்காசியில் நடைபயணத்தை துவக்கி வைத்தார்.

நேற்று மாலை திருநெல்வேலி வந்த அவர் கூறியதாவது:மத்திய அரசின் செயல்பாடுகள், வரி விதிப்புகளால் மக்கள் துயரத்தில் உள்ளனர். இதை கண்டித்து மாவட்டம் தோறும் கட்சி சார்பில் நடைபயணம் நடக்கிறது. 'பாரத் ஜோடோ' -பாரதமே ஒன்றிணைவோம் பெயரில் அகில இந்திய நடைபயணத்தை ராகுல் மேற்கொள்கிறார்.


latest tamil news



செப்.,7 கன்னியாகுமரியில் நடைபயணத்தை துவங்கும் ராகுல், தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களில் 3,500 கி.மீ., நடக்கிறார். நாடு முழுதிலும் இருந்தும் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் நடைபயணம் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்., நிர்வாகிகள் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, ஜெயக்குமார், மேலிட பார்வையாளர் வல்ல பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-ஆக-202219:36:41 IST Report Abuse
Kasimani Baskaran கிரிமினல் வழக்கில் ஜாமீனில் இருப்பவர்கள் இது போல நடை பயணம் செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை வாங்க வேண்டும்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
10-ஆக-202217:36:17 IST Report Abuse
Soumya கோமாளி பப்பூ எப்பிடி தா குட்டிக்கரணம் போட்டாலும் ... எழும்ப முடியாது
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
10-ஆக-202216:45:20 IST Report Abuse
Mohan சரி..சரி.. ராகுலுக்கு மந்திரிச்சு பிணைக்கயிறு கட்டிடீங்க. ஆனா பாருங்க..வழி முழுக்க அவுரு வர்ராரான்னு பாக்க ஜனங்க வர்ரதுக்கு பிரியாணி, குவாட்டர், எல்லாம் தர ஏற்பாடு பண்ணிட்டீங்களா? கூடவே முக்கியமாக அவரை வரவேற்பதற்கு சிறுபான்மை அணியினரை ஒவ்வொரு ஊரிலும் ரெடி பண்ணுங்க இல்லாட்டா அவுரு பேசும்போது கைதட்ட ஆளிருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X